ஹர்ஷா போக்லே, ரவி சாஸ்திரி கூட கிடையாது: ஐபிஎல் வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த 65 பிரபலங்கள் யார் யார்?

By Rsiva kumar  |  First Published Mar 22, 2023, 10:40 AM IST

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கொண்ட பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் ஐபில் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசன் தொடங்கப்பட்டது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஆண்டு தோறும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த சீசன் இந்தியாவில் நடத்தப்பட்டது.

IND vs AUS Chennai 3rd ODI: போட்டிக்கு நடு நடுவில் மழை பெய்ய வாய்ப்பு - போட்டியில் பாதிப்பு வருமா?

Tap to resize

Latest Videos

இந்த சீசனில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதுவரையில், மும்பை இந்தியன்ஸ் 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் டைட்டில் வென்றுள்ளன.

நாளை ஒரு நாள் மட்டும், கிரிக்கெட் பார்க்க ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் இதுவரையில் ஒரு முற்ஐ கூட சாம்பியன் பட்டம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 10 அணிகள் இடம் பெற்றுள்ள ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி தொடங்கி வரும் மே 28 ஆம் தேதி நடக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிஙஸ் அணியும் மோதுகின்றன.

டீமில் இடமில்லை, டிவி பக்கமாக சென்று போலீஸ் அதிகாரியாக ரவுடிகளை அடித்து விரட்டும் ஷிகர் தவான்!

இந்த நிலையில், ஐந்த 16ஆவது ஐபிஎல் சீசனுக்கான வர்ணனையாளர்கள் கொண்ட பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி மொழி வாரியாக வர்ணனையாளர்கள் கொண்ட பட்டியலில் இடம் பிடித்துள்ள பிரபலங்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க.....

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்கள் பட்டியல்:

தமிழ் - ஆர் ஜே பாலாஜி, யோமகேஷ், ஆர் முத்துராமன், கேவி சத்தியநாராயணன், திருஷ் காமினி.

மலையாளம் - எஸ் ஸ்ரீசாந்த், தினு யோகன்னன், ஷியாஸ் முகமது, விஷ்ணு ஹரிஹரன்

கன்னடம் - விஜய் பரத்வாஜ், ஸ்ரீநிவாச மூர்த்தி பி, பரத் சிபிலி, பவன் தேஷ்பாண்டே, அகில் பாலசந்திரா, ஜிகே அணில்குமார், சுமேஷ் கோனி, குண்டப்பா விஸ்வநாத், ரூபேஷ் ஷெட்டி.

தெலுங்கு - எம் எஸ் கே பிரசாத், வேணுகோபால் ராவ், டி சுமன், கல்யாண் கிருஷ்ணன், டி ஆஷிஷ் ரெட்டி, கௌஷிக் என்சி, தொகுப்பாளர் ரவி ரக்லே.

ஆங்கிலம் - சுனில் கவாஸ்கர், ஜாக் காலிஸ், மேத்யூ ஹைடன், கெவின் பீட்டர்சன், ஆரோன் பின்ச், டாம் மூடி, பால் கோலிங்வுட், டேனியல் வெட்டோரி, டேனியல் மோரிஷன், டேவிட் ஹஸ்ஸி.

ஹிந்தி - விரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், மிதாலி ராஜ், முகமது கைஃப், சஞ்சய் மஞ்ரேக்கர், இம்ரான் தாகீர், தீப் தஷ்குப்தா, அஜய் மெஹ்ரா, பதம்ஜீத் செஹ்ராவத் மற்றும் ஜதின் சப்ரு, கே ஸ்ரீகாந்த், எஸ் பத்ரிநாத், லக்‌ஷ்மிபதி பாலாஜி, எஸ் ரமேஷ், முரளி விஜய்.

மராத்தி - அமோல் முசூம்தார், சந்தீப் படீல், ஆதித்யா தாரே, நிலேஷ் நேது, பிரசாத் ஷிர்சாகர், 

குஜராத்தி - மனன் தேஷாய், ஆக்சாஷ் திரிவேதி, நயன் மோன்கியா

பங்களா - அஷோக் திண்டா, ஆர் ஜே வருண் கௌசிக், பிரதீப் ராய், பல்லாப் பாசு, அபிஷேக் ஜூஞ்ஜுஞ்வாலா

தம்பி டி20ல ஆடுற மாதிரி இதுலயும் ஆடக் கூடாது: சூர்யகுமார் யாதவ்விற்கு, சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

இந்திய கிரிக்கெட் பிரபலங்கள்:

முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இந்த ஐபிஎல் தொடர் மூலமாக வர்ணனையாளராக களமிறங்குகிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்தியா அணி டி20 உலகக் கோப்பை கைப்பற்ற காரணமாக இருந்தவர்களில் ஸ்ரீசாந்தும் ஒருவர்.

சுனில் கவாஸ்கர், விரேந்திர சேவாக், மிதாலி ராஜ், ஹர்பஜன் சிங் (4 முறை ஐபிஎல் வெற்றி, 2 முறை உலகக் கோப்பை சாம்பியன்), முகமது கைஃப், இர்ஃபான் பதான், யூசுப் பதான், முரளி விஜய், லக்‌ஷ்மிபதி பாலாஜி, சுப்பிரமணியன் பத்ரிநாத், ஸ்ரீசாந்த், சந்தீப் பாட்டீல், க்ரிஷ் ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்திய பிரபலங்கள்.

இந்த வர்ணனையாளர்கள் கொண்ட பட்டியலில் முரளி கார்த்திக், ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்லே ஆகியோரது பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கு ஜெயிச்சுக்கிட்டே இருந்தால் தான் மரியாதை - இந்திய பயிற்சியாளருக்கு ரவி சாஸ்திரி அறிவுரை!

IPL 2023 நேரடி ஒளிபரப்பு:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ரசிகர்கள் ஐபிஎல் 2023ஐ நேரலையில் பார்க்கலாம். ஆங்கிலம், இந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், குஜராத்தி மற்றும் பங்களா ஆகிய மொழிகளில் பல்வேறு சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

IPL 2023 லைவ் ஸ்ட்ரீமிங்:

IPL இன் நேரடி ஒளிபரப்பு Viacom18 இன் JioCinema இல் கிடைக்கிறது. இந்த ஆப் மற்றும் இணையதளம் போஜ்புரி, தமிழ், பெங்காலி, மலையாளம் மற்றும் குஜராத்தி உள்ளிட்ட 12 மொழிகளில் ஐபிஎல்லை இலவசமாக ஒளிபரப்பு செய்கிறது.

click me!