தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிக்கு முன்னதாக மழை பெய்த நிலையில், போட்டியானது 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதுவரையில் நடந்த போட்டிகளின் படி இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலும், நியூசிலாந்து 2ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 4ஆவது இடத்திலும் உள்ளன.
தோனியைப் போன்று எல்லா மதிப்பும், மரியாதையும் ரோகித் சர்மாவுக்கு உண்டு – சுரேஷ் ரெய்னா!
நெதர்லாந்து:
ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், விக்ரம்ஜித் சிங், தேஜா நிடமானுரு, ரோலோஃப் வான் டெர் மெர்வே, பால் வான் மீகரென், லோகன் வான் பீக், ஆர்யன் தத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.
தென் ஆப்பிரிக்கா:
டெம்பா பவுமா (கேப்டன்), கெரால்டு கோட்ஸி, குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, கஜிஸோ ரபாடா, ரஸிவ் வான் டெர் டுசென்.
நெதர்லாந்து விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது தரமசாலா மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
பிற்பகல் 1.30 மணிக்கு டாஸ் போட இருந்த நிலையில், ஈரமான அவுட்பீல்டு மற்றும் மழையின் காரணமாக 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகு தொடர்ந்து மழை பெய்த நிலையில் மாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. இதன் காரணமாக போட்டியானது 43 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. மேலும், 1 முதல் 9 ஓவர்கள் வரையில் முதல் பவர்பிளே என்றும், 10-35 ஓவர்கள் வரையில் 2ஆவது பவர்பிளே என்றும், 36 முதல் 43 ஓவர்கள் வரையில் 3ஆவது பவர்பிளே என்றும் கூறப்பட்டுள்ளது. 3 பந்து வீச்சாளர்கள் அதிகபட்சமாக 9 ஓவர்கள் வரையில் பந்து வீசலாம். மேலும், 2 பவுலர்கள் 8 ஓவர்கள் வரையில் பந்து வீசலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து தற்போது வரையில் 3 விக்கெட் இழந்து 49 ரன்கள் வரையில் எடுத்துள்ளது. 13 ஓவர்கள் முடிந்துள்ளது. இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 7 போட்டிகளில் 6ல் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இதே போன்று உலகக் கோப்பை கிரிகெட்டில் விளையாடிய 3 போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி தான் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உலகக் கோப்பை 15ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தப்ரைஸ் ஷம்சி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கெரால்டு கோட்ஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று நெதர்லாந்து அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரியான் க்ளீனிற்கு பதிலாக லோகன் வான் பீக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.