18 மாசம் சும்மா இருந்த ரஹானே எப்படி துணை கேப்டன்? ஒன்னும் புரியல – சவுரவ் கங்குலி!

By Rsiva kumar  |  First Published Jun 30, 2023, 9:33 PM IST

18 மாசம் சும்மா இருந்த அஜிங்கியா ரஹானேவை எப்படி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று ஒன்றும் புரியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில், அடுத்து வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட இருக்கிறது.

ஒரு கையில் துண்டிக்கப்பட்ட ஆட்டு தலை, ஒரு கையில் குழந்தையை பிடித்தபடி போஸ் கொடுத்த ஷாகீத் அப்ரிதி!

Tap to resize

Latest Videos

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரோகித் சர்மா கேப்டனாகவும், அஜிங்கியா ரஹானே துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.  அஜிங்கியா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023: 8ஆவது முறையாக இந்தியா சாம்ப்யன் - 9 சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் இந்தியா 8 வின்

அதில் பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரங் கங்குலியும் தனது பங்கிற்கு விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒருநாள் கிரிக்கெட், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் ஏன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கலாம் என்று கேள்வி எழுப்பியதற்கு கங்குலி பதிலளித்தார்.

ஸ்டிக் ஊன்றி நடக்கும் நாதன் லயான்; இன்று விளையாட வாய்ப்பில்லை; ஆஸிக்கு பின்னடைவு!

அஜிங்கியா ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது தான் புரியவில்லை. ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா நீண்ட காலமகா இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். அப்படியிருக்கும் போது அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கலாம். கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஓய்வில் இருந்துவிட்டு அதன் பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடிய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

மக்களுக்காக சேவை செய்யவே வருகிறேன் – அம்பத்தி ராயுடு!

அதன் பிறகு தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதுதான் ஒன்றும் புரியவில்லை. ஆனால், 100க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவரை அணியிலிருந்து நீக்க முடியாது. தேர்வுக்குழுவினருக்கு புஜாராவைப் பற்றி தெளிவான சிந்தனை இருக்க வேண்டும். அவர் இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டுமா? அல்லது இளைஞர்களுடன் தொடர விரும்புகிறீர்களா?

புஜாரா போன்ற ஒருவரை கைவிட முடியாது, பின்னர் தேர்வு செய்ய முடியாது, மீண்டும் கைவிட முடியாது. பின்னர் தேர்வு செய்யப்பட்டார். அதே போன்று தான் அஜிங்கியா ரஹானேவும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

click me!