ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இந்தூரில் தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ராவிற்குப் பதிலாக பிரஷித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார்.
IND vs AUS: கடைசி வாய்ப்பில் சதம் விளாசி அசத்திய ஷ்ரேயாஸ் ஐயர், அடிக்கடி வைத்தியம் பார்த்தது ஏன்?
இதே போன்று ஆஸ்திரேலியாவில் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பேட் கம்மிஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹசல்வுட் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், கடந்த போட்டியில் 71 ரன்கள் எடுத்த கெய்க்வாட் இந்தப் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்து வருகின்றனர். இதற்கிடையில் மழை குறுக்கீடு ஏற்பட்டது.
IND vs AUS: 2023ல் ரோகித் சர்மாவின் சிக்ஸர் சாதனையை முறியடித்த சுப்மன் கில்!
ஃபர்ஸ்ட் அண்ட் செகண்ட் ஒரு நாள் போட்டி: அரைசதம்
சிறிது நேரத்திற்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. இதில், கில் 37 பந்துகளில் தனது 10ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியிலும் கில் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஒரு நாள் போட்டியில் 47 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் அடித்து 9ஆவது அரைசதம் அடித்தார். அதே போன்று தற்போது 2ஆவது ஒருநாள் போட்டியிலும் 46 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் அடித்து 10ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
Asian Games 2023: ஹாக்கி போட்டியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
இந்த ஆண்டில் 2023ல் ரோகித் சர்மா 43 சிக்ஸர்கள் சாதனை:
அதோடு, இந்த ஆண்டில் மட்டும் அதிக சிக்ஸர்கள் அடித்திருந்த ரோகித் சர்மாவின் 43 சிக்ஸர்கள் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் முதல் 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக சர்மாவின் அதிக சிக்ஸர்கள் சாதனையை முறியடித்துள்ளார்.
ODI வரலாற்றில் அதிக சதங்கள் சாதனை:
தொடர்ந்து விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் சதத்தை பூர்த்தி செய்து 105 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று சுப்மன் கில் 92 பந்துகளில் தனது 6ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலமாக ஒரே ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலிலும் இணைந்துள்ளார்.
ஒரே ஆண்டில், 5 அல்லது அதற்கும் மேலாக ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியல்,
விராட் கோலி (2012, 2017, 2018, 2019)
ரோகித் சர்மா (2017, 2018, 2019)
சச்சின் டெண்டுல்கர் (1996, 1998)
ராகுல் டிராவிட் (1999)
சவுரவ் கங்குலி (2000)
ஷிகர் தவான் (2013)
சுப்மன் கில் (2023)
National Daughters Day 2023- மகளோடு கொஞ்சி விளையாடிய ரோகித் சர்மா; வைரலாகும் புகைப்படம்!
25 வயதிற்குள்ளாக ஒரு நாள் போட்டிகளில் 5 அல்லது அதற்கு மேல் சதங்கள் அடித்தவர்கள்:
சச்சின் டெண்டுல்கர், 1996
கிரீம் ஸ்மித், 2005
உபுல் தராங்கா, 2006 (youngest)
விராட் கோலி, 2012
சுப்மன் கில், 2023
வெறும் 35 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 6 சதங்கள் அடித்துள்ளார்.
சுப்மன் கில்லும் 2023ம்
அதிக சர்வதேச ரன்கள் – 1763
அதிக சர்வதேச சதங்கள் – 7
அதிக சர்வதேச சிக்ஸ்கள் – 46
அதிக சர்வதேச பவுண்டரிகள் – 186
ஒரு நாள் போட்டியும், 2023ம்
அதிக ஒரு நாள் போட்டி ரன்கள் – 1230
அதிக ஒரு நாள் போட்டி சதங்கள் – 5
அதிக ஒரு நாள் போட்டி 50+ ரன்கள் – 10
அதிக ஒரு நாள் போட்டி பவுண்டரிகள் – 139
அதிக ஒரு நாள் போட்டி சிக்ஸர்கள் – 47
Hangzhou 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மகளிர் டீம் இந்தியா; பதக்கம் உறுதி!
ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 6 சதங்கள் அடித்தவர்கள் (இன்னிங்ஸ்)
35 இன்னிங்ஸ் – சுப்மன் கில்
46 இன்னிங்ஸ் – ஷிகர் தவான்
53 இன்னிங்ஸ் – கேஎல் ராகுல்
61 இன்னிங்ஸ் – விராட் கோலி
68 இன்னிங்ஸ் – கவுதம் காம்பீர்
சுப்மன் கில் 104 ரன்கள் எடுத்திருந்த போது கேமரூன் க்ரீன் ஓவரில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
MS Dhoni Ad Shooting: மோகன்லால் உடன் இணைந்து விளம்பரத்தில் நடிக்கும் தோனி: வைரலாகும் புகைப்படம்!
Shubman Gill in international cricket in 2023:
- Most runs.
- Most 100s.
- Most 50+ scores.
- Most 4s.
- Most 6s.
- Most runs in ODIs.
- Most 100s in ODIs.
- Hundred in all formats.
- Double Hundred in ODIs.
The Year of Shubman Gill…!!! pic.twitter.com/I0o7YIonzb