
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இந்தூரில் தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ராவிற்குப் பதிலாக பிரஷித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார்.
Asian Games 2023: ஹாக்கி போட்டியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
இதே போன்று ஆஸ்திரேலியாவில் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பேட் கம்மிஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹசல்வுட் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், கடந்த போட்டியில் 71 ரன்கள் எடுத்த கெய்க்வாட் இந்தப் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்து வருகின்றனர். இதற்கிடையில் மழை குறுக்கீடு ஏற்பட்டது.
IND vs AUS, Jasprit Bumrah: 2ஆவது ODIல் பும்ரா இல்லையா? என்ன காரணம் தெரியுமா?
சிறிது நேரத்திற்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. இதில், கில் 37 பந்துகளில் தனது 10ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியிலும் கில் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஒரு நாள் போட்டியில் 47 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் அடித்து 9ஆவது அரைசதம் அடித்தார். அதே போன்று தற்போது 2ஆவது ஒருநாள் போட்டியிலும் 46 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் அடித்து 10ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
National Daughters Day 2023- மகளோடு கொஞ்சி விளையாடிய ரோகித் சர்மா; வைரலாகும் புகைப்படம்!
அதோடு, இந்த ஆண்டில் மட்டும் அதிக சிக்ஸர்கள் அடித்திருந்த ரோகித் சர்மாவின் 43 சிக்ஸர்கள் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் முதல் 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக சர்மாவின் அதிக சிக்ஸர்கள் சாதனையை முறியடித்துள்ளார்.