ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இடம் பெறாததற்கான காரணம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று இந்தூரில் 2ஆவது ஒரு நாள் போட்டி நடக்கிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீஸ் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்துள்ளார். பேட் கம்மின்ஸ்க்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார்.
ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹசல்வுட் இடம் பெற்றுள்ளனர். மேலும், வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் இந்தப் போட்டியில் அறிமுகமாகிறார். இதே போன்று இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பிரஷித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார்.
இந்தியா:
சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், பிரஷித் கிருஷ்ணா, முகமது ஷமி.
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஷ் லபுஷேன், கேமரூன் க்ரீன், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹசல்வுட், மேத்யூ ஷார்ட், சீன் அபாட், ஆடம் ஜம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.
National Daughters Day 2023- மகளோடு கொஞ்சி விளையாடிய ரோகித் சர்மா; வைரலாகும் புகைப்படம்!
இந்த நிலையில், இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஏன் இடம் பெறவில்லை என்பதற்கான காரணம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து, கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்காக ஜஸ்ப்ரித் பும்ரா அணியுடன் இந்தூருக்கு செல்லவில்லை. அவர் தனது குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றுள்ளார். ஆதலால் அணி நிர்வாகத்தால் சிறிய இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. 2வது ஒருநாள் போட்டியில் பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அணியில் இணைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IND vs AUS: 2ஆவது ஒரு நாள் போட்டியில், இந்தியா பிளேயிங் 11 எப்படி இருக்கும்?
எனினும், அவர் இன்றைய பிளேயிங் 11ல் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்று கைப்பற்றும். ஒரு வேளை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரானது 1-1 என்று சமனாகும். இரு அணிகளும் இதுவரையில் நேருக்கு நேர் மோதிய 147 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 55 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 82 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 6 ஒரு நாள் போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணி 4 முறையும், 2ஆவது பேட்டிங் ஆடிய அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 320 ரன்களும், ஆவரேஜ் 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 267 ரன்களும் ஆகும்.
இந்த மைதானத்தின் அதிகபட்ச ஸ்கோர் 418/5, இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்
குறைந்தபட்ச ஸ்கோர் 225/10, தென் ஆப்பிரிக்கா – இந்தியா
சேஸ் செய்ய்ப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் – 294/5, இந்தியா – ஆஸ்திரேலியா
குறைந்தபட்ச ஸ்கோர் எடுத்து தோல்வி – 247/9, இந்தியா – தென் ஆப்பிரிக்கா
இன்று நடக்கும் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு எதிராக இந்தூரில் நடக்கும் 2ஆவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
🚨 UPDATE 🚨: Mr Jasprit Bumrah did not travel with the team to Indore for the 2nd ODI against Australia.
He has gone to visit his family and given a short break by the team management. Fast bowler Mukesh Kumar has joined the team as Bumrah's replacement for the 2nd ODI.
Bumrah… pic.twitter.com/4shp3AlXZV