இந்தியாவிற்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று இந்தூரில் 2ஆவது ஒரு நாள் போட்டி நடக்கிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீஸ் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்துள்ளார். ஸ்மித் 54 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில், 27 போட்டிகளில் வெற்றியும், 24 போட்டிகளிலும் தோல்வியும் கண்டுள்ளார்.
National Daughters Day 2023- மகளோடு கொஞ்சி விளையாடிய ரோகித் சர்மா; வைரலாகும் புகைப்படம்!
ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹசல்வுட் இடம் பெற்றுள்ளனர். மேலும், வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் இந்தப் போட்டியில் அறிமுகமாகிறார். இதே போன்று இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பிரஷித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார்.
IND vs AUS: 2ஆவது ஒரு நாள் போட்டியில், இந்தியா பிளேயிங் 11 எப்படி இருக்கும்?
இந்தியா:
சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், பிரஷித் கிருஷ்ணா, முகமது ஷமி.
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஷ் லபுஷேன், கேமரூன் க்ரீன், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹசல்வுட், மேத்யூ ஷார்ட், சீன் அபாட், ஆடம் ஜம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்று கைப்பற்றும். ஒரு வேளை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரானது 1-1 என்று சமனாகும். இரு அணிகளும் இதுவரையில் நேருக்கு நேர் மோதிய 147 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 55 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 82 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 6 ஒரு நாள் போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணி 4 முறையும், 2ஆவது பேட்டிங் ஆடிய அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 320 ரன்களும், ஆவரேஜ் 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 267 ரன்களும் ஆகும்.
Hangzhou 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மகளிர் டீம் இந்தியா; பதக்கம் உறுதி!
இந்த மைதானத்தின் அதிகபட்ச ஸ்கோர் 418/5, இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்
குறைந்தபட்ச ஸ்கோர் 225/10, தென் ஆப்பிரிக்கா – இந்தியா
சேஸ் செய்ய்ப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் – 294/5, இந்தியா – ஆஸ்திரேலியா
குறைந்தபட்ச ஸ்கோர் எடுத்து தோல்வி – 247/9, இந்தியா – தென் ஆப்பிரிக்கா
இன்று நடக்கும் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
ரூ.450 கோடி பட்ஜெட், வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!