IND vs AUS: கடைசி வாய்ப்பில் சதம் விளாசி அசத்திய ஷ்ரேயாஸ் ஐயர், அடிக்கடி வைத்தியம் பார்த்தது ஏன்?

By Rsiva kumar  |  First Published Sep 24, 2023, 5:24 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 3 ரன்களில் ரன் அவுட்டான நிலையில், 2ஆவது ஒரு நாள் போட்டியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சதம் விளாசி அசத்தியுள்ளார்.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி தற்போது இந்தூர் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இதில், கெய்க்வாட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கில் மற்றும் ஷ்ரெயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்தனர்.

IND vs AUS: 2023ல் ரோகித் சர்மாவின் சிக்ஸர் சாதனையை முறியடித்த சுப்மன் கில்!

Tap to resize

Latest Videos

ஒரு கட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தனது 15ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே போன்று சுப்மன் கில்லும் 37 பந்துகளில் தனது 10ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து தொடர்ந்து அதிரடியாக விளையாடினர். ஒரு கட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 86 பந்துகளில் தனது ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சதம் விளாசியுள்ளார்.

Asian Games 2023: ஹாக்கி போட்டியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆனால், அதன் பிறகு 105 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் 90 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உள்பட 105 ரன்கள் எடுத்து வெளியேறினார். நம்பர் 3ல் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், கடைசியாக விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் முறையே 9, 88, 65, 54, 63, 44, 80, 49, 82, 3, 105 ரன்கள் என்று 642 ரன்கள் எடுத்துள்ளார்.

IND vs AUS, 2nd ODI: ஆஸியில் அதிரடி மாற்றங்கள், கேப்டனான ஸ்மித்; இருக்கு, இந்தப் போட்டியில் சம்பவம் இருக்கு!

ஆனால், போட்டியின் போது அவரது இடது கையில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பெரிதாக ஒன்றும் பாதிப்பு ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், அடுத்த போட்டியில் விராட் கோலி விளையாட உள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனினும், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர்.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்தவர்கள்:

213 ரன்கள் – விவிஎஸ் லட்சுமணன் – யுவராஜ் சிங், சிட்னி 2004

212 ரன்கள் – விராட் கோலி – ஷிகர் தவான், கான்பெரா, 2016

207 ரன்கள் – விராட் கோலி – ரோகித் சர்மா, பெர்த், 2016

200 ரன்கள் – சுப்மன் கில் – ஷ்ரேயாஸ் ஐயர், இந்தூர், 2023

199 ரன்கள் – சச்சின் டெண்டுல்கர் – விவிஎஸ் லட்சுமணன், இந்தூர், 2001

National Daughters Day 2023- மகளோடு கொஞ்சி விளையாடிய ரோகித் சர்மா; வைரலாகும் புகைப்படம்!

click me!