ஷிகர் தவான் சேப்டர் குளோஸா? இலங்கை தொடரில் நீக்கப்பட்டது ஏன்?

By Rsiva kumarFirst Published Dec 28, 2022, 12:31 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் ஷிகர் தவான் இடம் பெறவில்லை.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் ஜனவரி 3 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. டி20 போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் இல்லை: டுவிட்டரில் கருத்து பதிவிட்ட ஹர்ஷா போக்ளே!

டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ரிஷப் பண்ட்டுக்கு அணியில் இடமில்லை. இஷான் கிஷா, சஞ்சு சாம்சன், புதுமுக வீரர்களான ஷிவன் மவி, முகேஷ் குமார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் போட்டி தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார். ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடர் என்று எதிலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இடம் பெறவில்லை.

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா கேப்டன், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் அணியில் இல்லை!

அண்மையில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றிருந்த ஷிகர் தவான் சிறப்பாக செயல்படவில்லை. முதல் ஒரு நாள் போட்டியில் 7 ரன்னிலும், 2ஆவது ஒரு நாள் போட்டியில் 8 ரன்னிலும், 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தார். ஆக மொத்தமாக, 18 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்குப் பதிலாக அணியில் இடம் பிடித்திருந்த இஷான் கிஷான் அதிரடியாக ஆடி இளம் வயதில் இரட்டை சதம் அடித்துள்ளார். 131 பந்துகளில் 10 சிக்சர்கள், 24 பவுண்டரிகள் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்..! கேப்டன் யார்..?

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் சதம் அடித்தார். ரஞ்சி டிராபி போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆதலால், ஷிகர் தவானுக்கு இனிம் இந்திய அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான். 37 வயதான ஷிகர் தவான், இந்திய அணிக்காக இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளீல் விளையாடி 2315 ரன்களும், 167 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 17 சதம் எடுத்ததோடு, 6,793 ரன்களும், 68 டி20 போட்டிகளில் பங்கேற்று 1759 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுவரை அவர் சரியான ஃபார்மில் இல்லாததால், இந்திய அணியின் தேர்வு கமிட்டியால் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிக்கான இந்திய அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் கூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சகால், அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மவி, முகேஷ் குமார்.

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், முகமது சமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்

நீங்க இந்த ஸ்கோர அடிச்சா போதும்: ஆஸ்திரேலியா 575 எடுத்து டிக்ளேர்!

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் அட்டவணை:

ஜனவரி 03 - இந்தியா - இலங்கை - முதல் டி20 - மும்பை வான்கடே மைதானம்

ஜனவரி 05 - இந்தியா - இலங்கை - 2ஆவது டி20 - மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புனே

ஜனவரி 07 - இந்தியா - இலங்கை - 3ஆவது டி20 - சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், ராஜ்கோட்

ஜனவரி 10 - இந்தியா - இலங்கை முதல் ஒரு நாள் போட்டி - பர்சபரா கிரிக்கெட் மைதானம், குவகாத்தி

ஜனவரி 12 - இந்தியா - இலங்கை 2ஆவது ஒரு நாள் போட்டி - ஈடான் கார்டன் மைதானம், கொல்கத்தா

ஜனவரி 15 - இந்தியா - இலங்கை 3ஆவது ஒரு நாள் போட்டி - கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்

click me!