நீங்க இந்த ஸ்கோர அடிச்சா போதும்: ஆஸ்திரேலியா 575 எடுத்து டிக்ளேர்!

By Rsiva kumarFirst Published Dec 28, 2022, 11:04 AM IST
Highlights

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது 2ஆவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலந்த்.

தென் ஆப்பிரிக்கா அணி:

டீன் எல்கர் (கேப்டன்), சாரெல் எர்வீ, தியூனிஸ் டி ப்ருய்ன், டெம்பா பவுமா, காயா ஜோண்டோ, கைல் வெரெய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.

டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் இல்லை: டுவிட்டரில் கருத்து பதிவிட்ட ஹர்ஷா போக்ளே!

அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மார்கோ ஜான்சென் 59 ரன்களும், வெர்ரேனி 52 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சில் ஆஸ்திர்ரேலியாவில் கிரீன் 5 விக்கெட் கைப்பற்றினாற். ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், லையன் மற்றும் போலண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா கேப்டன், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் அணியில் இல்லை!

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் 200 ரன்கள் எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஹெட் மற்றும் கிரீன் தலா 51 ரன்கள் எடுத்து வெளியேறினர். அலெக்ஸ் கேரே முதல் முறையாக சதம் அடித்து சாதனை படைத்தார். ஆம், 149 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி 2ஆவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. 5 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

IPL 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்..! கேப்டன் யார்..?

click me!