டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் இல்லை: டுவிட்டரில் கருத்து பதிவிட்ட ஹர்ஷா போக்ளே!

By Rsiva kumar  |  First Published Dec 28, 2022, 10:18 AM IST

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ரிஷப் பண்ட் இடம் பெறாதது குறித்து கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இலங்கை எதிரான டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி வரும் ஜனவரி 3 ஆம் தேதி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 

டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளன. ஐஎபிஎல் மினி ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஷிவம் மவியை ரூ.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. டெல்லி கேபிடள்ஸ் அணி முகேஷ் குமாரை ரூ.5.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஷிவம் மவி, மற்றும் முகேஷ்குமார் ஆகியோர் புதுமுக வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த வீரர் கண்டிப்பாக முச்சதம் அடிப்பார்..! சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ரிஷப் பண்ட் இடம் பெறவில்லை. ஷிகர் தவானும் அணியில் இடம் பெறவில்லை. இது குறித்து கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டி20யில் இடம் பிடிப்பதற்கான வரிசையில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் தான் தற்போது முன்னிலை பெற்றுள்ளனர். இஷான், ருதுராஜ், சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அற்புதமான டாப் 4 பேட்ஸ்மேன். கடைசி பேட்டிங் இடத்திற்கு ஹூடா மற்றும் திரிபாதியுடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

இரட்டை சதத்தை ஆக்ரோஷமா கொண்டாடி காலை உடைத்துக்கொண்டு களத்தை விட்டு வெளியேறிய வார்னர்..! வைரல் வீடியோ
 

டி20 போட்டிக்கான இந்திய அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் கூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சகால், அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மவி, முகேஷ் குமார்.

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், முகமது சமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்

 

squad for three-match T20I series against Sri Lanka. pic.twitter.com/iXNqsMkL0Q

— BCCI (@BCCI)

 

squad for three-match ODI series against Sri Lanka. pic.twitter.com/XlilZYQWX2

— BCCI (@BCCI)

 

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா கேப்டன், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் அணியில் இல்லை!
 

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் அட்டவணை:

ஜனவரி 03 - இந்தியா - இலங்கை - முதல் டி20 - மும்பை வான்கடே மைதானம்

ஜனவரி 05 - இந்தியா - இலங்கை - 2ஆவது டி20 - மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புனே

ஜனவரி 07 - இந்தியா - இலங்கை - 3ஆவது டி20 - சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், ராஜ்கோட்

ஜனவரி 10 - இந்தியா - இலங்கை முதல் ஒரு நாள் போட்டி - பர்சபரா கிரிக்கெட் மைதானம், குவகாத்தி

ஜனவரி 12 - இந்தியா - இலங்கை 2ஆவது ஒரு நாள் போட்டி - ஈடான் கார்டன் மைதானம், கொல்கத்தா

ஜனவரி 15 - இந்தியா - இலங்கை 3ஆவது ஒரு நாள் போட்டி - கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்
 

click me!