ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் கேப்டன்களுக்கான போட்டோஷூட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொள்ளவில்லை.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று மாலை 6 மணிக்கு ராஷ்மிகா மந்தனா, தமன்னா உள்ளிட்டோரின் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. அதன் பிறகு ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான முதல் போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
ஆனால், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே சில கேப்டன்கள் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர். டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர் கேப்டனாக செயல்படுகிறார். கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக பாதி போட்டிகளுக்கு மட்டும் வர மாட்டார் என்ற் அறிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக நிதிஷ் ராணா தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL 2023 :தோனிக்கு காயம், ஆடுவதில் சந்தேகம்: ரசிகர்களுக்கு குட் நியுஸ் சொன்ன சிஎஸ்கே சிஇஓ!
இதே போன்று, சில வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வரும் நிலையில், அவர்களுக்குப் பதிலாக தற்காலிக கேப்டன்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட எய்டன் மார்க்ரம் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருவதால், துவக்கத்தில் சில ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று தெரிய வந்திருக்கிறது. ஆகையால் அவருக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL 2023: முதல் போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
இந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் மீட்டிங் நடந்துள்ளது. அதன் பிறகு ஐபிஎல் டிராபியுடன் சேர்ந்து அணிகளின் கேப்டன்களின் போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. ஆனால், அதற்கான காரணம் இதுவரையில் வெளியாக நிலையில், தற்போது இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கூறியிருப்பதாவது: கடந்த 29 ஆம் தேதி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு பிறகு ரோகித் சர்மாவின் உடல் நிலைசரியில்லை. காய்ச்சல் போன்று தொற்று ஏற்பட்டது. இதனால், அவர் முழு ஓய்வில் இருந்து வருகிறார். மேலும், அவரால் அகமதாபாத்திற்கு பயணித்து மற்ற அணிகளின் கேப்டன்களுடன் இணைந்து போட்டோஷூட் மற்றும் மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவர் முற்றிலும் குணமாகிவிடுவார். அந்தப் போட்டியில் அவர் கண்டிப்பாக விளையாடுவார் என்று தெரிவித்துள்ளது.
பும்ராவிற்குப் பதிலாக களமிறங்க தயாரான அர்ஜூன் டெண்டுல்கர்!
வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி பெங்களூருவில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Solar system IPL version!🙌 🦁💛
📸 : pic.twitter.com/z71f3f9zBf