அகமதாபாத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வரும் நிலையில், ஐபிஎல் இன்றைய முதல் போட்டி நடப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொருத்தரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவிற்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது வேறு ஒன்றுமில்லை, இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில், ராஷ்மிகா மந்தனா, தமன்னா, அர்ஜித் சிங் ஆகியோரது கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. இன்றைய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடடன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
IPL 2023 :தோனிக்கு காயம், ஆடுவதில் சந்தேகம்: ரசிகர்களுக்கு குட் நியுஸ் சொன்ன சிஎஸ்கே சிஇஓ!
இந்த நிலையில், இன்றைய போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று அகமதபாத்தில் கன மழை பெய்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. ஆனால், இதனை சற்றும் எதிர்பாராத மைதான பராமரிப்பாளர்கள் தார்ப்பாய் கொண்டு மைதானத்தை மூடியுள்ளனர்.
IPL 2023: முதல் போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
வெப்பச்சலனம் காரணமாக அகமதாபாத்தில் மழை பெய்துள்ளது. கிட்டத்தட்ட அரைமணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இதே நிலை நாளைகும் நீடித்தால் பல கோடி ரூபாய் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஐபிஎல் தொடக்க விழா பாதிக்கப்படுவதோடு, மட்டுமின்றி போட்டியும் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது
IPL 2023: 10 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் இதோ...!
Thala Bathram! ☔️ 🦁💛 pic.twitter.com/y8VqrBVkGS
— Chennai Super Kings (@ChennaiIPL)
இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனினும், போட்டி நடைபெறும் போது மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாக கூறப்படுகிறது. எனினும் யாரும் எதிர்பாராத வகையில் மழை பெய்தால், வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் இது ஏமாற்றமாக இருக்கும். மழை பெய்தால், டாஸிலும் தாக்கம் ஏற்படும். அது மைதானத்தின் தன்மையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா: காரணம் என்ன தெரியுமா?
நேற்று அகமதாபாத்தில் மட்டுமின்றி மாநிலத்தில் பல பகுதிகளில் 6 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை இருந்தநிலையில் பரவலாக மழை பெய்துள்ளது. ஆனால், இன்று பகல் நேரத்தில் 33 டிகிரியும், இரவு நேரத்தில் 23 டிகிரியாகவும் வெப்பம் நிலவக் கூடும். ஆனால், இன்றைய போட்டியில் மழை பெய்வதற்கு 0 சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Choosing the right rain snack ✅ 🦁💛 pic.twitter.com/FyskXh1URj
— Chennai Super Kings (@ChennaiIPL)