IPL 2023 :தோனிக்கு காயம், ஆடுவதில் சந்தேகம்: ரசிகர்களுக்கு குட் நியுஸ் சொன்ன சிஎஸ்கே சிஇஓ!

By Rsiva kumarFirst Published Mar 31, 2023, 9:53 AM IST
Highlights

தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன் குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார்.
 

கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று மாலை 6 மணிக்கு ராஷ்மிகா மந்தனா, தமன்னா உள்ளிட்டோரின் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. அதன் பிறகு ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான முதல் போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. அகமதாபாத் மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நடக்கும் அனைத்து கேப்டன்களின் ஃபோட்டோஷூட் நிகழ்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

IPL 2023: முதல் போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

இதுவரையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக என்று கூறும் அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனியின் பயிற்சியை காண்பதற்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். அப்போது தோனி தோனி என்று கோஷமிடுவதும், கை தட்டி ஆரவாரம் செய்வதும், விசில் அடிப்பதும் என்று ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு தோனியை சென்னையில் கண்டு ரசித்துள்ளனர்.

IPL 2023: 10 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் இதோ...!

கடந்த சீசனில் பின் பாதியில் கேப்டனாக தோனி செயல்பட்டார். ஆனால், அந்த சீசன் முழுவதும் 14 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டது. இந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ், அஜிங்க்யா ரஹானே உள்பட மாஸ் வீரர்கள் களமிறங்குகின்றனர்.

இதுவரையில் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வந்த எம் எஸ் தோனிக்கு பயிற்சியின் போது இடது காலின் மூட்டுப் பகுதியில் வலி ஏற்பட்டதாகவும், இதனால், இன்றைய போட்டியில் தோனி களமிறங்க மாட்டார் என்றும் தகவல் வெளியானது. ஒருவேளை இன்றைய போட்டியில் தோனி களமிறங்கவில்லை என்றால் அவருக்குப் பதிலாக பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்பட்டது.

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா: காரணம் என்ன தெரியுமா?

இந்த நிலையில், தோனி காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்று வெளியான தகவல் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன், குட் நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, தோனி இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று கூறியுள்ளார். இது தோனியை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - உத்தேச ஆடும் லெவன்:

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பாதி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகேஷ் சௌத்ரி, மஹீஷ் தீக்‌ஷனா.

 

Choosing the right rain snack ✅ 🦁💛 pic.twitter.com/FyskXh1URj

— Chennai Super Kings (@ChennaiIPL)

 

click me!