IPL 2023: ஐபிஎல்லில் நல்லா ஆடினால் உனக்கு உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும்! இளம் வீரரை உசுப்பேற்றும் சேவாக்

Published : Mar 30, 2023, 10:48 PM IST
IPL 2023: ஐபிஎல்லில் நல்லா ஆடினால் உனக்கு உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும்! இளம் வீரரை உசுப்பேற்றும் சேவாக்

சுருக்கம்

ஐபிஎல்லில் நன்றாக ஆடினால் தான் இஷான் கிஷனுக்கு ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.  

ஒருநாள் உலக கோப்பை இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக நடக்கும் இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு எல்லா சர்வதேச அணிகளிலுமே இடம் கிடைப்பதற்கான வாய்ப்பாக இருக்கும்.

இந்த ஆண்டு இந்திய மண்ணில் உலக கோப்பையை வென்றே தீரும் உறுதியில் உள்ள இந்திய அணியின் ஆடும் லெவன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ரோஹித்துடன் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரராக இறங்குவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரனா ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடி இரட்டை சதமடித்த  ஷுப்மன் கில் தான், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தொடக்க வீரராக இறங்கினார்.

IPL 2023: முதல் போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

இதிலிருந்து அவரைத்தான் ஒருநாள் உலக கோப்பைக்கான தொடக்க வீரராக இந்திய அணி பார்ப்பது தெரிகிறது. அவருக்கு முன்பாகவே ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த இஷான் கிஷனுக்கு அதன்பின்னர் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன்பின்னர் கிடைத்த ஒருசில வாய்ப்புகளில் அவரும் சரியாக ஆடவில்லை. எனவே ஷுப்மன் கில் தான் இதுவரை உலக கோப்பைக்கான தொடக்க வீரராக பார்க்கப்பட்டாலும், ஐபிஎல்லில் இஷான் கிஷன் சிறப்பாக ஆடும்பட்சத்தில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கலாம் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சேவாக், முதலில் நான் ருதுராஜ் கெய்க்வாட்டைத்தான் நினைத்தேன். ஆனால் அண்மைக்காலமாக இஷான் கிஷன் சரியாக ஆடவில்லை. இந்திய அணியிலும் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. எனவே அவர் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடவேண்டும் என்று நினைப்பார். ஐபிஎல்லில் நன்றாக ஆடினால் தான் ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று வீரேந்திர சேவாக் கூறினார்.

IPL 2023: சிஎஸ்கே - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான ஒற்றுமைகள்..! ஒரேமாதிரி பலம்.. ஒரேமாதிரி பலவீனம்

இஷான் கிஷன் கடந்த சீசனில் சரியாக ஆடவில்லை. கடந்த சீசனில் சரியாக ஆடாமல் 418 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த சீசனில் அவர் சிறப்பாக ஆடவேண்டியது அவசியம்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!