IPL 2023: சிஎஸ்கே - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான ஒற்றுமைகள்..! ஒரேமாதிரி பலம்.. ஒரேமாதிரி பலவீனம்

By karthikeyan VFirst Published Mar 30, 2023, 9:06 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் சிஎஸ்கே - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான 3 ஒற்றுமைகளை பார்ப்போம்.
 

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் நாளை (மார்ச் 31) தொடங்குகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி களமிறங்குகின்றன. நாளை நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும், 4 முறை சாம்பியன் சிஎஸ்கேவும் மோதுகின்றன.

இந்த சீசன் தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. ரெய்னாவின் விலகலுக்கு பிறகே சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பலவீனமான நிலையில், இந்த சீசனுக்கான மிடில் ஆர்டரும் பெரியளவில் பலமாக இல்லை. இந்த சீசனில் களமிறங்கும் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான ஒற்றுமைகளை பார்ப்போம்.

1. இரு அணிகளிலும் தரமான ஸ்பின்னர்கள்:

சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய இரு அணிகளிலும் தரமான ஸ்பின்னர்கள் உள்ளனர். கேகேஆர் அணியின் சீனியர் வீரரும் மேட்ச் வின்னருமான சுனில் நரைன், கேகேஆர் அணியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிவருகிறார். இத்தனை ஆண்டுகளாக பந்துவீசியும் அவரது பவுலிங்கை கணித்து எதிரணி வீரர்களால் அவர் மீது ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. சுனில் நரைன் மாயாஜால ஸ்பின்னர். அவருடன் தமிழகத்தை சேர்ந்த தரமான ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தியும் இருக்கிறார்.

IPL 2023: ரோஹித் சர்மா அப்பவே அப்படி.. இப்ப சொல்லவா வேணும்..! அனில் கும்ப்ளே புகழாரம்

அதேபோல் சிஎஸ்கே அணியில் இலங்கையை சேர்ந்த தரமான ஸ்பின்னர் மஹீஷ் தீக்‌ஷனா இருக்கிறார். அவருடன் ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி ஆகிய சீனியர் ஸ்பின்னர்கள் உள்ளனர். எனவே இரு அணிகளும் ஸ்பின்னை பொறுத்தமட்டில் மிகச்சிறந்த அணிகளாக உள்ளன.

2. ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு எதிராக தரமான பேட்ஸ்மேன்கள் இல்லை

கேகேஆர் அணியின் முக்கியமான வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஸ்பின்னிற்கு எதிராக அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள். ஆனால் தரமான ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு எதிராக பெரியளவில் சோபிப்பதில்லை. நல்ல வேகத்தில் சரியான லைன் & லெந்த்தில் வீசினால் இவர்களை கட்டுப்படுத்திவிடலாம்.

சிஎஸ்கே அணி வீரர்களும் அதேபோலத்தான், தரமான ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு எதிராக பெரிதாக சோபிக்கும் வீரர்கள் இல்லை. ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, அம்பாதி ராயுடு, டெவான் கான்வே ஆகிய வீரர்கள் ஸ்பின்னை அடித்து நொறுக்கக்கூடிய வீரர்கள். ஆனால் தரமான ஃபாஸ்ட் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசும்பட்சத்தில் இவர்களை வீழ்த்திவிடலாம்.

இந்த பிரச்னையை சரி செய்வதற்காகத்தான் கேகேஆர் அணி ரஹ்மானுல்லா குர்பாஸையும், சிஎஸ்கே அணி பென் ஸ்டோக்ஸையும் அணியில் எடுத்துள்ளன.

3. தரமான டெத் பவுலர்கள் இல்லை

சிஎஸ்கே அணியில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்தவர் ட்வைன் பிராவோ தான். அவரது ஓய்வுக்கு பின் அவரை வெகுவாக மிஸ் செய்கிறது சிஎஸ்கே அணி. பிராவோ இருந்தவரை அவரை நம்பித்தான் டெத் ஓவர்களை கொடுத்துவந்தார் தோனி. இப்போது அவர் இல்லாத சூழலில், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் சிஎஸ்கே  அணியில் இல்லை. தீபக் சாஹர் புதிய பந்தில் ஸ்விங் செய்து வீசக்கூடியவர். அவர் டெத் ஓவர்களில் கடந்த காலங்களில் வீசியபோது எதிரணி வீரர்கள் அடி வெளுத்து வாங்கியுள்ளனர்.

IPL 2023: கடைசி நேர அறிவிப்பு.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார்

அதேபோலவே கேகேஆர் அணியை பொறுத்தமட்டிலும், ஷர்துல் தாகூர், லாக்கி ஃபெர்குசன் ஆகிய இருவருமே டெத் ஓவர் பவுலர்கள் இல்லை. இவர்களது பவுலிங்கில் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் அடிக்கப்படும். ஆனால் கேகேஆர் அணியில் ஆண்ட்ரே ரசல் அந்த குறையை தீர்ப்பார்.

இரு அணிகளிலுமே சுனில் நரைன் மற்றும் மஹீஷ் தீக்‌ஷனா ஆகிய 2 ஸ்பின்னர்கள் தான் டெத் ஓவர்களையும் சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது
 

click me!