IPL 2023: கடைசி நேர அறிவிப்பு.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார்

By karthikeyan V  |  First Published Mar 30, 2023, 5:51 PM IST

ஐபிஎல் 16வது சீசனின் முதல் போட்டியில் எய்டன் மார்க்ரம் ஆடாத நிலையில், அவர் ஆடாத போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை புவனேஷ்வர் குமார் வழிநடத்துவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 


ஐபிஎல் 16வது சீசன் நாளை(மார்ச் 31) தொடங்குகிறது. ஐபிஎல்லுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்சி செய்துவந்த கேன் வில்லியம்சனை புறக்கணித்துவிட்டு எய்டன் மார்க்ரமை கேப்டனாக நியமித்து சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் களமிறங்குகிறது. 

நாளை ஐபிஎல் தொடங்கும் நிலையில், சன்ரைசர்ஸ் அணி ஏப்ரல் 2ம் தேதி அதன் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் சன்ரைசர்ஸ் கேப்டன் எய்டன் மார்க்ரம் ஆடவில்லை. தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்துக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் 2 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.

Tap to resize

Latest Videos

IPL 2023: ஜோஷ் ஹேசில்வுட்டும் விலகல்..! ஆர்சிபிக்கு மரண அடி

இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறுவதில் தென்னாப்பிரிக்க அணிக்கு சிக்கல் உள்ளது. அதனால் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முழு பலத்துடன் களமிறங்க தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதனால் மார்க்ரம் தேசிய அணிக்கு ஆடவுள்ளதால் ஏப்ரல் 2ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஆடும் போட்டியில் மார்க்ரம் ஆடவில்லை.

IPL 2023: இந்த சீசனில் கண்டிப்பாக அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும்..? அடித்து சொல்லும் மைக்கேல் வான்

அதனால் அந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். புவனேஷ்வர்குமார் இதுவரை சன்ரைசர்ஸ் அணியை 7 போட்டிகளில் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். அதில் 5 தோல்விகளையும், 2 வெற்றிகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), அப்துல் சமாத், ராகுல் திரிபாதி, க்ளென் ஃபிலிப்ஸ், அபிஷேக் ஷர்மா, மார்கோ யான்சென், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, டி.நடராஜன், உம்ரான் மாலிக், ஹாரி ப்ரூக், மயன்க் அகர்வால், அகீல் ஹுசைன், ஹென்ரிச் கிளாசன், அன்மோல்ப்ரீத் சிங், அடில் ரஷீத், மயன்க் மார்கண்டே, விவ்ராந்த் சர்மா, மயன்க் தாகர், சமர்த் வியாஸ், சன்விர் சிங், உபேந்திர சிங் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி.
 

click me!