IPL 2023: 10ம் வகுப்பு மார்க் ஷீட்டை பகிர்ந்த விராட் கோலி..! பற்றி எரியும் சமூக வலைதளங்கள்

Published : Mar 30, 2023, 04:01 PM IST
IPL 2023: 10ம் வகுப்பு மார்க் ஷீட்டை பகிர்ந்த விராட் கோலி..! பற்றி எரியும் சமூக வலைதளங்கள்

சுருக்கம்

விராட் கோலி அவரது 10ம் வகுப்பு மார்க் ஷீட்டை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், அது செம வைரலாகிவருகிறது.  

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் முதன்மையானவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட்டில் 28 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 46 சதங்கள் மற்றும் டி20யில் ஒரு சதம் என மொத்தம் 75 சதங்களை விளாசி, அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 100 சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த 2ம் இடத்தில் உள்ளார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2023: ஜோஷ் ஹேசில்வுட்டும் விலகல்..! ஆர்சிபிக்கு மரண அடி

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் சேர்த்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார் விராட் கோலி.

ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணிக்காக ஆடிவரும் விராட் கோலி, ஐபிஎல்லில் 6624 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல்லில் ஒரே அணிக்காக 15 ஆண்டுகள் ஆடிய முதல் மற்றும் ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி. ஆனால் விராட் கோலியால் ஆர்சிபி அணிக்கு ஒரு முறை கூட கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்பதுதான் பெரிய சோகம்.

ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகி அந்த அணியில் ஒரு வீரராக ஆடிவரும் கோலி, நாளை (மார்ச் 31) தொடங்கும் ஐபிஎல் 16வது சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளார். ஐபிஎல் நாளை தொடங்கும் நிலையில், விராட் கோலி அவரது 10ம் வகுப்பு மார்க் ஷீட்டை சமூக வலைதளத்தில் பகிர, அது செம வைரலாகிவருகிறது.

IPL 2023: இந்த சீசனில் கண்டிப்பாக அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும்..? அடித்து சொல்லும் மைக்கேல் வான்

பொதுவாக விளையாட்டு, சினிமா, அரசியல் துறைகளில் சாதித்தவர்கள் பள்ளி படிப்பில் பெரிதாக சோபித்திருக்க மாட்டார்கள். ஆனால் விராட் கோலி அப்படியல்ல. பள்ளியில் நன்றாகவே படித்திருக்கிறார் என்பதை அவர் வாங்கியிருக்கும் மதிப்பெண்கள் உறுதி செய்கின்றன. கிரிக்கெட்டில் மலை மலையாய் ரன்களை குவித்துவரும் விராட் கோலியின் மார்க் ஷீட்டை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்துடன் அதை பகிர்ந்தும் வருகின்றனர்.

விராட் கோலியின் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் பாடவாரியாக..

ஆங்கிலம் - 83 
இந்தி - 75
கணிதம் - 51
அறிவியல் - 55
சமூக அறிவியல் - 81
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!