
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நாளை வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக புனேயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல விரும்பியுள்ளார்.
இதற்காக பவான் ஹான்ஸ் ஹெலிகாப்டர் மூலமாக மும்பைக்கு சென்றுள்ளார். அங்கு 2 நாட்கள் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு அங்கிருந்து புனேவுக்கு காரிலேயே செல்ல முடிவு செய்திருக்கிறார். இதற்காக ரோகித் சர்மா தன்னிடமிருந்த லம்போர்கினி என்ற சொகுசு காரை தேர்வு செய்துள்ளார். மேலும், அந்த காரிலேயே கிட்டத்தட்ட 215 கிமீ வேகத்தில் வேகமாக வந்திருக்கிறார்.
உலகக் கோப்பையில் 5ஆவது முறையாக இந்தியா – வங்கதேசம் பலப்பரீட்சை: வெற்றி யாருக்கு?
பொதுவாகவே காரில் வேகமாக செல்வதை அதிகம் விருமப் கூடியவர் ரோகித் சர்மா. இந்த நிலையில் 215 கிமீ வேகத்தில் வந்த ரோகித் சர்மாவின் லம்போர்கினி காரானது 3 இடங்களில் காவல் துறையினர் வைத்திருந்த வேகத்தை அளக்கும் கருவியில் பதிவாகியிருக்கிறது. அதன் மூலமாக அந்த காருக்கு ஆன்லைன் மூலமாக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரே நேரத்தில் 3 முறை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
இச்சம்பவம் குறித்து போக்குவரத்து காவல் துறையில் ஆய்வு மேற்கொண்டதில் அந்த காரானது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கார் என்பது தெரிய வந்துள்ளது. உலகக் கோப்பைக்கு நடுவில் மும்பை – புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் இப்படி 215 கிமீ வேகத்தில் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிசிசிஐ மற்றும் காவல்துறையினரின் திட்டப்படி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது அணியின் பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். அவர்களுக்கு என்று பாதுகாப்பிற்கு காவல்துறை வாகனமும் வரும். இந்த நிலையில், இது போன்ற அதிவேக பயணம் செய்த ரோகித் சர்மாவிற்கு ஏதேனும் அசம்பாவிதமும் நேரிட்டால் அது பிசிசிஐ மற்றும் காவல் துறையினருக்கு தான் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும்.
இருப்பினும், உலகக் கோப்பையின் போது பரபரப்பான நெடுஞ்சாலையில் இந்த பொறுப்பற்ற செயல் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.