உலகக் கோப்பையில் 5ஆவது முறையாக இந்தியா – வங்கதேசம் பலப்பரீட்சை: வெற்றி யாருக்கு?

By Rsiva kumar  |  First Published Oct 18, 2023, 8:08 PM IST

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டி நாளை புனே மைதானத்தில் நடக்க இருக்கிறது.


மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டி நாளை பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதுவரையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை இந்தியா எதிர்கொண்டது. இதில், 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்தது.

கடைசில காட்டு காட்டுன்னு காட்டிய நியூசிலாந்து – கடைசி 10 ஓவர்களில் 103 ரன்கள் – மொத்தமாக 288 ரன்கள் குவிப்பு!

Tap to resize

Latest Videos

இதே போன்று வங்கதேச அணி விளயாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், 2 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. இதுவரையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஒரு நாள் போட்டிகளில் 40 முறை மோதியுள்ளன. இதில், 31 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவும், 8 ஒரு நாள் போட்டிகளில் வங்கதேச அணியும் வெற்றி பெற்றுள்ளன.

SA vs NED: 36 ஆண்டுகளுக்குப் பிறகு கபில் தேவ் சாதனையை முறியடித்த நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்!

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 265 ரன்கள் குவித்தது. இதில், வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தவ்ஹீத் ஹிரிடோய் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விளையாடிய இந்திய அணியில் சுப்மன் கில் மட்டுமே நிலைத்து நின்று விளையாடி 121 ரன்கள் குவித்தார். கடைசி வரை போராடிய அக்‌ஷர் படேல் 42 ரன்களில் வெளியேறினார். இந்தப் போட்டியின் போது அக்‌ஷர் படேலுக்கு கையில் காயம் ஏற்பட்டது.

IND vs BAN: பவுலிங் பயிற்சி செய்த ரோகித் சர்மா – ஆலோசனை கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

எனினும், இந்தப் போட்டியில் இந்திய அணி 6 ரன்களில் தோல்வியை தழுவியது. இதே போன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் உலகக் கோப்பை போட்டியில் 4 முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 3 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை மட்டுமே வங்கதேச அணி வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் கடந்த 2007 ஆம் ஆண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

NZ vs AFG: நியூசியில், கேன் வில்லியம்சன் இல்லை – ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

அதன் பிறகு நடந்த 2011, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைகளில் முறையே 87, 109 மற்றும் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தான் 5ஆவது முறையாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் நாளை நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!