சச்சின் முதல் ரிஷப் பண்ட் வரை: சதத்தை கோட்டை விட்ட இந்திய வீரர்கள் யார் யார்? எத்தனை முறை?

By Rsiva kumarFirst Published Dec 26, 2022, 12:00 PM IST
Highlights

டெஸ்ட் போட்டிகளில் பதற்றம் காரணமாகவே தங்களது சதத்தை கோட்டை விட்டவர்களில் மாஸ்டர் பிளாஸ்டர் என்று சச்சின் டெண்டுல்கர் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் போன்று அல்லாமல் டெஸ்ட் போட்டி 5 நாட்கள் விளையாடுவது. டெஸ்ட் போட்டிக்கு எப்படி அடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எத்தனை மணி நேரம் களத்தில் நின்று ரன்கள் சேர்க்கிறோம் என்பது தான் முக்கியம். அதிலேயும், அரைசதம், சதம், இரட்டை சதம், 3 சதம் என்று அடிப்பதெல்லாம் அபாராம். அரைசதம் அடித்தவர்களில் எத்தனையோ பேர் சதத்தை கோட்டைவிட்டு வெளியில் சென்று இருக்கிறார்கள் தெரியுமா?

இந்தியா 89க்கு ஆல் அவுட் ஆகியிருக்கும்: டுவிட்டர் பதிவுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!

இவ்வளவு ஏன், இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் ஜாம்பவான் என்றெல்லாம் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கூட டெஸ்ட் அரங்கில் பதற்றத்தால் 10 முறை தனது சதத்தை கோட்டை விட்டுள்ளார். அதிக முறை சதத்தை கோட்டைவிட்டவர்களில் சச்சின் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்ததாக தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் 9 முறை தனது சதத்தை கோட்டைவிட்டுள்ளார்.

ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 2 ஆண்டுகள் தடையா?

எம் எஸ் தோனி, சுனில் கவாஸ்கர், விரேந்திர சேவாக் ஆகியோர் 5 முறை தங்களது சதத்தை கோட்டை விட்டுள்ளனர். இதில், கூடுதலாக ரிஷப் பண்டும் இணைந்துள்ளார். அவர் 6 முறை தனது சதத்தை கோட்டை விட்டுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்து அரைசதத்தை கோட்டை விட்டார். 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 93 ரன்கல் சேர்த்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதற்கு முன்னதாக 5 முறை டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டவர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட் இருந்தார். 2ஆவது போட்டியில் 93 ரன்கள் எடுத்து 7 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டதன் மூலமாக 6 முறை டெஸ்ட் அரங்கில் பதற்றம் காரணமாக சதத்தை கோட்டைவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைண்டிஸ்ட் அஷ்வின், நீங்க பண்ணது தரமான சம்பவம்.. வேற லெவல் இன்னிங்ஸ்..! சேவாக் புகழாரம்

சச்சின் டெண்டுகல் - 10

ராகுல் டிராவில் - 9

ரிஷப் பண்ட் - 6

எம் எஸ் தோனி - 5

சுனில் கவாஸ்கர் - 5

விரேந்திர சேவாக் - 5

click me!