ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் கொச்சியில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு பெரிய கிராக்கி இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களான சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் க்ரீன், ஜேசன் ஹோல்டர் ஆகிய ஆல்ரவுண்டர்களுக்கு கிராக்கி இருந்தது. இவர்களில் ஹோல்டரை தவிர மற்ற மூவரும் அதிகமான தொகைக்கு விலைபோனார்கள்.
IPL 2023: டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்
ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச தொகையான ரூ.18.5 கோடி கொடுத்து சாம் கரனை எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சாம் கரன், டி20 உலக கோப்பையை இங்கிலாந்து வெல்ல காரணமாக இருந்து தொடர் நாயகன் விருதையும் வென்ற சாம் கரனுக்காக ஏலத்தில் அணிகள் அடித்துக்கொண்டன. கடைசியில் பஞ்சாப் அணி, ரூ.18.5 கோடிக்கு சாம் கரனை எடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவானும் ஜானி பேர்ஸ்டோவும் இறங்குவார்கள். 3ம் வரிசையில் இங்கிலாந்து அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டோன், 4ம் வரிசையில் ஜித்தேஷ் ஷர்மா ஆடுவார்கள். ஜித்தேஷ் ஷர்மா கடந்த சீசன்களில் நன்றாக ஆடியதால் அவர் 4ம் வரிசையில் ஆடுவார். 5ம் வரிசையில் ஷாருக்கான் - பிரப்சிம்ரன் சிங் ஆகிய இருவரில் ஒருவரும், 6ம் வரிசையில் ஆல்ரவுண்டர் சாம் கரனும் பேட்டிங் ஆடுவார்கள்.
பவுலர்கள் - ரிஷி தவான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ரபாடா, அர்ஷ்தீப் சிங்.
சைண்டிஸ்ட் அஷ்வின், நீங்க பண்ணது தரமான சம்பவம்.. வேற லெவல் இன்னிங்ஸ்..! சேவாக் புகழாரம்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்:
ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், சாம் கரன், ரிஷி தவான்/ராஜ் பவா, ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.