PAK vs NZ: ஆடும் லெவன் தேர்விலும் அஃப்ரிடி ஆதிக்கம்..! பாக்.,- நியூசி., அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Dec 25, 2022, 8:11 PM IST
Highlights

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில், பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரில் இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆகி வரலாற்று படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மேம்படுத்தும் நோக்கில் ஷாஹித் அஃப்ரிடி இடைக்கால தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

சைண்டிஸ்ட் அஷ்வின், நீங்க பண்ணது தரமான சம்பவம்.. வேற லெவல் இன்னிங்ஸ்..! சேவாக் புகழாரம்

நேற்றுதான் (டிசம்பர் 23) பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவராக அஃப்ரிடி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 3 வீரர்கள் சேர்க்கப்பட்டனர். அறிமுக ஃபாஸ்ட் பவுலர் ஷாநவாஸ் தஹானி, மற்றொரு ஃபாஸ்ட் பவுலர் மிர் ஹம்ஸா மற்றும் ஆஃப் ஸ்பின்னர் சஜித் கான் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

பாகிஸ்தான் அணி தேர்வில் பாரபட்சம் இருப்பதாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில், பாகிஸ்தான் அணியை தேர்வு செய்வது மட்டுமல்லாது, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்வதிலும் ஷாஹித் அஃப்ரிடியின் பங்களிப்பு இருக்கும் என்று கேப்டன் பாபர் அசாமே கூறியிருக்கிறார்.

இதன்மூலம் அஃப்ரிடிக்கு ஆடும் லெவனை தேர்வு செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது தெரிகிறது. பொதுவாக கேப்டன், பயிற்சியாளர் இணைந்துதான் ஆடும் லெவனை தேர்வு செய்வார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவனை உறுதி செய்வதில் அஃப்ரிடியும் தலையிட அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

நாளை(டிசம்பர் 26) கராச்சியில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

AUS vs SA: நானே ஒதுங்கிக்கிறேன்.. விலகிய சீனியர் வீரர்! பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணி அறிவிப்பு

உத்தேச பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், ஷான் மசூத், காம்ரான் குலாம், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், ஹசன் அலி, நௌமன் அலி, நசீம் ஷா, அப்ரார் அகமது.

உத்தேச நியூசிலாந்து அணி:

டாம் லேதம், வில் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே, ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல், இஷ் சோதி, மிட்செல் பிரேஸ்வெல், டிம் சௌதி, நீல் வாக்னர்.
 

click me!