AUS vs SA: நானே ஒதுங்கிக்கிறேன்.. விலகிய சீனியர் வீரர்! பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணி அறிவிப்பு

By karthikeyan V  |  First Published Dec 25, 2022, 5:57 PM IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் 76.92 வெற்றி சதவிகிதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை(டிசம்பர் 26) மெல்பர்னில் தொடங்குகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு பின் தங்கிய மற்றும் இந்த தொடரில் 1-0 என பின் தங்கியிருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் முக்கியமானது. அதேவேளையில், ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது.

Tap to resize

Latest Videos

ICC WTC: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை வலுவாக தக்கவைத்த இந்தியா

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் அவராகவே விலகியுள்ளார். முதல் டெஸ்ட்டில் காயம் காரணமாக ஆடாத  ஹேசில்வுட், தான் இப்போது ஆடுவதற்கு தகுதியாக இல்லை என்பதை உணர்ந்ததால் அவராகவே 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். ஒரு அணியின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்று நிறைய பேசுகிறோம். ஹேசில்வுட் தன்னை பற்றி யோசிக்காமல் அணியின் நலனை கருத்தில்கொண்டு அவராகவே விலகியது, அணியின் சிறப்பான சூழலுக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

IPL 2023: குறைவான தொகையில் நிறைவான தேர்வு.. KKR அணியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழக வீரர்கள்! வலுவான ஆடும் லெவன்

ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், ஸ்காட் போலந்த்.
 

click me!