ஷாஹித் அஃப்ரிடியின் முதல் அசைன்மெண்ட்.. பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 3 வீரர்கள் சேர்ப்பு

By karthikeyan VFirst Published Dec 25, 2022, 4:09 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவராக ஷாஹித் அஃப்ரிடி நியமிக்கப்பட்ட நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 

நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில், பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரில் இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆகி வரலாற்று படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மேம்படுத்தும் நோக்கில் ஷாஹித் அஃப்ரிடி இடைக்கால தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

ICC WTC: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை வலுவாக தக்கவைத்த இந்தியா

நேற்றுதான் (டிசம்பர் 23) பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவராக அஃப்ரிடி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 3 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஃபாஸ்ட் பவுலர் ஷாநவாஸ் தஹானி முதல் முறையாக பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுளார். இன்னொரு ஃபாஸ்ட் பவுலரான மிர் ஹம்ஸா 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிர் ஹம்ஸா கடைசியாக 2018ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடினார். ஆஃப் ஸ்பின்னர் சஜித் கானும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

BAN vs IND: நானே அவுட்டான கடுப்புல இருக்கேன்.. இவனுங்க வேற..! வரிந்து கட்டிய கோலி.. வைரல் வீடியோ

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், சௌத் ஷகீல், முகமது நவாஸ், நசீம் ஷா, ஹசன் அலி, நௌமன் அலி, அப்ரார் அகமது, முகமது வாசிம், ஜாஹித் மஹ்மூத், ஷாநவாஸ் தஹானி, சஜித் கான், மிர் ஹம்ஸா, காம்ரான் குலாம், சர்ஃபராஸ் அகமது, ஷான் மசூத்.
 

click me!