ஆர்சிபிக்குள்ள நடந்த பயிற்சி போட்டி; 55 பந்துகளில் சதம் விளாசிய மைக்கேல் பிரேஸ்வெல்!

By Rsiva kumar  |  First Published Apr 2, 2023, 2:24 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு உள்ளாக நடந்த பயிற்சி போட்டியில் அந்த அணியின் அதிரடி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் 55 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
 


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஐபிஎல் சீசன் முதல் இம்பேக் பிளேயர் என்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 31 ஆம் தேதி நடந்த ஐபிஎல் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதே போன்று 2ஆவது போட்டியில் மழை குறுக்கீடு காரணமாக டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

அர்ஜூனா விருது வென்ற முதல் கிரிக்கெட்டர்; முன்னாள் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் சலீம் துரானி காலமானார்!

Tap to resize

Latest Videos

நேற்று இரவு நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், ராஜஸ்தான் ராயலஸ் அணிக்கும் இடையில் 4ஆவது போட்டி நடக்கிறது. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான 5ஆவது போட்டி நடக்கிறது. அதற்கு முன்னதாக பெங்களூரு அணி, ஆர்சிபி அணிக்குள்ளாக டி20 போட்டியில் பங்கேற்றது.

IPL 2023: கத்துக்குட்டி புவனேஷ்வர் குமார் தலைமையில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் வெற்றி வாகை சூடுமா?

இந்தப் போட்டியில் டுபிளசிஸ் தலைமையிலான ஒரு அணியும், சுயாஷ் தலைமையிலான ஒரு அணியும் தங்களுக்குள் மோதின. இதில் டுபிளசிஸ் மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் ஓபனிங் ஆடினர். இந்தப் போட்டியில் டுபிளஸிஸ் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசினார். அவர் 35 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.இதே போன்று டேவிட் வில்லி 11 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார்.

IPL 2023: இம்பேக்ட் பிளேயர் செய்த வேலய பாருங்க; வந்தாரு நின்னாரு சிக்ஸ் அடிச்சாரு ஓடியே போயிட்டாரு!

இவர்களைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிராஸ்வெல் 55 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்தார். இதில், 7 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும் இறுதியில், டுபிளசிஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது.

IPL 2023: நாங்க எப்படி ஜெயிச்சோமுன்னே தெரியாது; ஏனா பிட்ச் அப்படி: கேஎல் ராகுல் ஓபன் டாக்!

இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சுயாஷ் பிரபுதேசாய் தலைமையிலான அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முகமது சிராஜ், ஹர்ஷல் படேல் ஆகியோரது பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. காயம் காரணமாக விளையாட மாட்டா என எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லும் பேட்ங்கில் அதிரடி காட்டினார்.

அவர் 46 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 78 ரன்கள் சேர்த்தார். அனுஷ் 32, லோமர் 48 ரன்களும் எடுக்க, சுயாஷ் பிரபுதேசாய் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதில் சிராஜ் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டோப்லி 4 ஓவரில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த பயிற்சி ஆட்டத்தில் கோலி கலந்த கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2023 KKR: பிராவோவின் விக்கெட் சாதனையை முறியடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எக்ஸ்பிரஸ் உமேஷ் யாதவ்!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் 5ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!