அர்ஜூனா விருது வென்ற முதல் கிரிக்கெட்டர்; முன்னாள் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் சலீம் துரானி காலமானார்!

By Rsiva kumar  |  First Published Apr 2, 2023, 1:04 PM IST

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான சலீம் துரானி இன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.
 


கடந்த 1934 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூலில் பிறந்தவர் சலீம் துர்பானி. கடந்த 1953 ஆம் ஆண்டு சௌராஷ்டிரா அணிக்காக விளையாடினார். இதையடுத்து 1954 - 56 ஆம் ஆண்டுகளில் குஜராத் அணிக்காக கிரிக்கெட் ஆடினார். இதையடுத்து, 1956 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரையில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றார். உள்ளூர் போட்டிகளில் விளையாடியதைத் தொடர்ந்து கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

IPL 2023: கத்துக்குட்டி புவனேஷ்வர் குமார் தலைமையில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் வெற்றி வாகை சூடுமா?

Tap to resize

Latest Videos

என்னதான் ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்திருந்தாலும் அவர் இந்திய நாட்டிற்காக விளையாடினார். சலீம் துரானி 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி 1202 ரன்களும் எடுத்துள்ளா. இதில், ஒரு முறை சதமும், 7 முறை அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 104 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று முறை 5 விக்கெட்டுகளும், ஒரு முறை 10 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.  

IPL 2023: இம்பேக்ட் பிளேயர் செய்த வேலய பாருங்க; வந்தாரு நின்னாரு சிக்ஸ் அடிச்சாரு ஓடியே போயிட்டாரு!

கடந்த 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சலீம் துரானி, 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். சலீம் துரானி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி அர்ஜூனா விருது வென்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

 

A legend forever. Rest in peace.🙏 pic.twitter.com/MFpy5QmWiO

— KolkataKnightRiders (@KKRiders)

 

IPL 2023: நாங்க எப்படி ஜெயிச்சோமுன்னே தெரியாது; ஏனா பிட்ச் அப்படி: கேஎல் ராகுல் ஓபன் டாக்!

இந்த நிலையில் தான் 88 வயதான சலீம் துரானி வயது மூப்பு காரணமாக நீண்ட நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜாம்நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

IPL 2023 KKR: பிராவோவின் விக்கெட் சாதனையை முறியடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எக்ஸ்பிரஸ் உமேஷ் யாதவ்!

 

I had the opportunity to interact with the great Salim Durani Ji on various occasions. One such occasion was in January 2004 at a programme in Jamnagar, in which a statue of the great cricketer Vinoo Mankad Ji was inaugurated. Here are some memories from the programme. pic.twitter.com/alESpsVCcx

— Narendra Modi (@narendramodi)

சலீம் துரானியுடன் பல நிகழ்வுகளில் அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஜனவரி 2004 இல் ஜாம்நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சிறந்த கிரிக்கெட் வீரர் வினு மன்கட் ஜியின் சிலை திறக்கப்பட்டது. அப்போது அவருடன் இருந்த நிகழ்ச்சியின் சில நினைவுகள் இங்கே என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  சச்சின் டெண்டுல்கர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரவி சாஸ்திரி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், அஜின்க்யா ரகானே, யூசுப் பதான் என்று ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

click me!