ஒருநாள் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக்க அஃப்ரிடியின் ஐடியாவை வழிமொழியும் ரவி சாஸ்திரி..! இதுகூட நல்லாத்தான் இருக்கு

By karthikeyan VFirst Published Jul 26, 2022, 3:16 PM IST
Highlights

ஒருநாள் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக்க, 50 ஓவரிலிருந்து 40 ஓவர்களாக குறைத்து நடத்தலாம் என்ற ஷாஹித் அஃப்ரிடியின் ஆலோசனையை வழிமொழிந்துள்ளார் ரவி சாஸ்திரி.
 

டி20 கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் இப்போதைய சூழலில், பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் கூட குறையவில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது.

டி20 கிரிக்கெட்டில் உலகம் முழுதும் லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. அதனால் டி20 கிரிக்கெட்டில் பணம் கோடிகளில் புழங்குவதால் வீரர்களும் அதில் ஆடத்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் 4 மணி நேரத்தில் டி20 போட்டி முடிந்துவிடுவதால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டுகளிலும் ஆடும் வீரர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதால், பாரம்பரிய டெஸ்ட் மற்றும் பணம் புழங்கும் டி20 ஆகிய 2 ஃபார்மட்டுகளிலும் மட்டும் ஆடலாம் என்று முடிவெடுத்து, பெரிய வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகின்றனர்.

இதையும் படிங்க - நீங்க ஒருநாள் கிரிக்கெட்டில் தான் 500 விக்கெட் வீழ்த்தியிருக்கீங்க..! வாசிம் அக்ரமுக்கு சல்மான் பட் பதிலடி

அண்மையில் பணிச்சுமை காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர்  பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதுதான் ஒருநாள் கிரிக்கெட் குறித்த விவாதத்தை எழுப்பியது.

வாசிம் அக்ரமே ஒருநாள் கிரிக்கெட் அழிந்துகொண்டிருக்கிறது என்று கூறியதுடன், ஒருநாள் கிரிக்கெட்டை முற்றிலுமாக நிறுத்திவிடலாம் எனுமளவிற்கு பேசியிருந்தார்.  

ஒருநாள் கிரிக்கெட் குறித்த விவாதம் வலுத்துவரும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக்க 50 ஓவர்களிலிருந்து 40 ஓவர்களாக குறைக்கலாம் என்று ஷாஹித் அஃப்ரிடி கருத்து கூறியிருந்தார்.

இதையும் படிங்க - Axar Patel Record: தோனி, யூசுஃப் பதானின் நீண்டகால சாதனையை தகர்த்த அக்ஸர் படேல்..!

ஷாஹித் அஃப்ரிடியின் இந்த கருத்துடன் ரவி சாஸ்திரியும் உடன்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் ஆரம்பத்தில் 60 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. பின்னர் சுவாரஸ்யமாக இருக்கவேண்டும் என்பதற்காக 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போதைய சூழலில் மேலும் சுவாரஸ்யமாக்க 50 ஓவர்களிலிருந்து 40 ஓவர்களாக குறைக்கலாம் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
 

click me!