விராட் கோலி பற்றி ஒரு வார்த்தை.. ரசிகரின் கேள்விக்கு அக்தரின் தரமான பதில்

By karthikeyan VFirst Published Jul 25, 2022, 9:37 PM IST
Highlights

விராட் கோலி பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு தரமாக பதிலளித்தார் ஷோயப் அக்தர்.
 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கோலி ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்தார். அதன்பின்னர் இரண்டரை ஆண்டாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிவருகிறார். 

ஐபிஎல்லில் சரியாக ஆடாத விராட் கோலி மீது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களிலும் சொதப்பினார். 

இதையும் படிங்க - இந்திய அணி 2 உலக கோப்பையை ஜெயிக்க முடியாம போனதுக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் - ரவி சாஸ்திரி

அஷ்வினை டெஸ்ட் அணியில் புறக்கணிக்க முடியும் என்றால், கோலியை டி20 அணியில் புறக்கணிக்க முடியாதா என்று கபில் தேவ் கேள்வியெழுப்பியிருந்தார். ஃபார்மில் இல்லாத கோலியை பிடித்து தொங்குவதற்கு பதிலாக ஃபார்மில் உள்ள வீரரை அணியில் எடுக்கவேண்டும் என்ற வலியுறுத்தல்களும் எழுந்தன.

விராட் கோலி மீது கடும் விமர்சனங்களும் கடுமையான பார்வைகளும் முன்வைக்கப்பட்டாலும், கேப்டன் ரோஹித் சர்மாவும் அணி நிர்வாகமும் அவருக்கு ஆதரவாக இருக்கிறது.

விராட் கோலி மீது முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனங்களை முன்வைக்கும் அதேவேளையில், சில முன்னாள் வீரர்கள் அவருக்கு ஆதரவாகவும் உள்ளனர். அப்படியானவர்களில் ஒருவர் தான் பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர். ஏற்கனவே அண்மையில், விராட் கோலிக்கு ஆதரவாக அக்தர் பேசியிருந்தார்.

இதையும் படிங்க - நீங்க ஒருநாள் கிரிக்கெட்டில் தான் 500 விக்கெட் வீழ்த்தியிருக்கீங்க..! வாசிம் அக்ரமுக்கு சல்மான் பட் பதிலடி

இந்நிலையில், இப்போது ஃபார்மில் இல்லாத கோலிக்கு ஒரு வார்த்தையில் என்ன கூறுவீர்கள் என்று ரசிகர் ஒருவர் அக்தரிடம் டுவிட்டரில் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அக்தர், “அவர் ஏற்கனவே லெஜண்ட்” என்று பதிலளித்தார்.
 

Legend already

— Shoaib Akhtar (@shoaib100mph)
click me!