ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹோம் மைதானமான ஜெய்ப்பூரில் நடக்கும் 48ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு நீயா, நானா என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஹோம் மைதானங்கள் நடக்கும் போட்டிகளில் எதிரணி வெற்றி பெற்று வருகிறது. கடந்த 1ஆம் தேதி லக்னோவில் நடந்த போட்டியில் பெங்களூரு வெற்றி பெற்றது. 2ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த போட்டியில் டெல்லி ஜெயித்தது. 3ஆம் தேதி லக்னோ மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இல்லையென்றால் இந்தப் போட்டியில் கண்டிப்பாக சென்னை ஜெயித்திருக்கும்.
இப்படியெல்லாம் தோற்றால் வருத்தமாகத்தான் இருக்கிறது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் எய்டன் மார்க்ரம்!
மொஹாலியில் நடந்த போட்டியில் மும்பை வெற்றி பெற்றது. நேற்று, ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று 48ஆவது போட்டி நடக்கிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ளது.
இதுவரையில் இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், கடந்த ஆண்டு நடந்த 3 போட்டிகளில் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது. அதுவும், இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. ஆனால், இந்த சீசனில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இந்த ஜெய்பூர் மைதானத்தில் இதுவரையில் நடந்த 2 போட்டிகளில் முதலில் ஆடிய அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது.
தன்னிடமிருந்த வெற்றியை தாரை வார்த்து கொடுத்த ஹைதராபாத்; லட்டு மாதிரி வாங்கிச் சென்ற கொல்கத்தா!
ஒரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மற்றொரு போட்டியில் எதிரணியும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த மைதானத்தில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. கடந்த சீசனில் அடைந்த தோல்விக்கு இந்த சீசனில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் இந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 49 போட்டிகளில் விளையாடி 33 முறை வெற்றி பெற்றுள்ளது. இங்கு நடக்கும் போட்டியை கணிக்கமுடியவில்லை. ஒரு போட்டியில் முதலில் ஆடிய அணியும், மற்றொரு போட்டியில் சேஸிங் செய்த அணியும் வெற்றி பெற்றிருக்கிறது.