
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் 8 மற்றும் 9ம் இடங்களில் இருக்கும் கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியின் முடிவு புள்ளி பட்டியலில் எந்த தாக்கத்தையும் பெரிதாக ஏற்படுத்தப்போவதில்லை.
ஹைதராபாத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
IPL 2023: கோலி, கோலி என முழங்கி மண்டை சூடேற்றிய ரசிகர்களை முறைத்த கம்பீர்..! வைரல் வீடியோ
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
மயன்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், ஹாரி ப்ரூக், அப்துல் சமாத், மார்கோ யான்சென், மயன்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, டி.நடராஜன்.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் 20 ரன்களுக்கு வெளியேறினார். வெங்கடேஷ் ஐயரும் 7 ரன்களூக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின்னர் கேப்டன் நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 31 பந்தில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் நிதிஷ் ராணா. அடித்து ஆடி அரைசதத்தை நெருங்கிய ரிங்கு சிங் 35 பந்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். ஆண்ட்ரே ரசல் 15 பந்தில் 24 ரன்கள் அடித்தார். பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 20 ஓவரில் 171 ரன்கள் அடித்த கேகேஆர் அணி, 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது.
IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்..! பஞ்சாப்பை வைத்து தரமான சம்பவம்
சன்ரைசர்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய மார்கோ யான்சென் மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.