PSL 2023: அரைசதம் அடித்து தனி ஒருவனாக பெஷாவர் அணியை கரைசேர்த்த பாபர் அசாம்! இஸ்லாமாபாத் அணிக்கு சவாலான இலக்கு

Published : Feb 23, 2023, 09:26 PM IST
PSL 2023: அரைசதம் அடித்து தனி ஒருவனாக பெஷாவர் அணியை கரைசேர்த்த பாபர் அசாம்! இஸ்லாமாபாத் அணிக்கு சவாலான இலக்கு

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவரில் 156 ரன்கள் அடித்து, 157 ரன்கள் என்ற சவாலான இலக்கை இஸ்லாமாபாத் அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் பெஷாவர் ஸால்மி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான போட்டி கராச்சியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:

காலின் முன்ரோ, ரஹ்மானுல்லா குர்பாஸ், ராசி வாண்டர்டசன், ஷதாப் கான் (கேப்டன்), அசாம் கான் (விக்கெட் கீப்பர்), ஆசிஃப் அலி, முபாசிர் கான், ஃபஹீம் அஷ்ரஃப், டாம் கரன், ஹசன் அலி, ருமான் ரயீஸ்.

ஒரு கேப்டன் இப்படி தொந்தியும் தொப்பையுமா இருக்கலாமா..? அசிங்கமா இல்ல..? ரோஹித்தை விளாசிய கபில் தேவ்

பெஷாவர் ஸால்மி அணி:

முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), சயிம் ஆயுப், டாம் கோலர் காட்மோர், ரோவ்மன் பவல், ஜேம்ஸ் நீஷம், தசுன் ஷனாகா, வஹாப் ரியாஸ், சுஃபியான் முகீம், உஸ்மான் காதிர், அர்ஷத் இக்பால்.

முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ஹாரிஸ் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 76 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய முகமது ஹாரிஸ் 21 பந்தில் 40 ரன்களை விளாசினார். பாபர் அசாம் ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நிற்க, மறுமுனையில் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்திலோ அல்லது ரன்னே அடிக்காமலோ மளமளவென ஆட்டமிழந்தனர். 

TNPL 2023 Auction: சஞ்சய் யாதவை ஓவர்டேக் செய்து உச்சபட்ச தொகைக்கு விலைபோன சாய் சுதர்சன்.. மாபெரும் சாதனை

சயிம் அயூப் (3), டாம் கோலர் காட்மோர்(1), ரோவ்மன் பவல்(0), ஜிம்மி நீஷம் (6), தசுன் ஷனாகா (11), வஹாப் ரியாஸ்(8), உஸ்மான் காதிர்(7) ஆகியோர் மளமளவென ஆட்டமிழக்க, கடைசிவரை களத்தில் நின்ற பாபர் அசாம் 58 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 75 ரன்களை குவித்து தனி நபராய் இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். பாபர் அசாமின் பொறுப்பான அரைசதத்தால் 20 ஓவரில் 156 ரன்கள் அடித்த பெஷாவர் ஸால்மி அணி, 157 ரன்கள் என்ற சவாலான இலக்கை இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?