IND vs AUS: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணி

By karthikeyan VFirst Published Jan 6, 2023, 9:34 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணியை பார்ப்போம்.
 

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் ஆடிவருகிறது. இந்த தொடர்களை முடித்துக்கொண்டு அடுத்ததாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான் மோதுகிறது. 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. பிப்ரவரி 9 முதல் மார்ச் 13 வரை இந்தியா  - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

IND vs SL: தம்பி நீ பண்ண வரைக்கும் போதும்.. கொஞ்சம் உட்காரு..! 3வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி

அந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் அதை 3-0 அல்லது 2-0 என வென்றால் தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும். ஏற்கனவே 78.57 சதவிகிதத்துடன் முதலிடத்தில் வலுவாக உள்ளது. முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு முன்னேறுவது உறுதி. இந்திய அணிக்கு இது முக்கியமான தொடர்.

இந்திய சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்படவுள்ள உத்தேச ஆஸ்திரேலிய அணியை பார்ப்போம். பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

டி20 கிரிக்கெட்டில் அபாரமான சாதனையை படைத்து ஜடேஜாவை ஓரங்கட்டிய அக்ஸர் படேல்..!

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணி:

உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலந்த், அஷ்டான் அகர், லான்ஸ் மோரிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், டாட் மர்ஃபி.
 

click me!