PAK vs NZ: சதமடித்த சர்ஃபராஸின் போராட்டம் வீண்.. வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட நியூசிலாந்து.! 2வது டெஸ்ட்டும் டிரா

By karthikeyan VFirst Published Jan 6, 2023, 8:09 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் கடைசி இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த சர்ஃபராஸ் அகமது வெற்றிக்காக கடுமையாக போராடியும் பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியவில்லை. கடைசியில் நியூசிலாந்துக்கான வெற்றி வாய்ப்பு இருந்தும் அதை அந்த அணி தவறவிட, ஆட்டம் டிராவில் முடிந்தது.
 

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது போட்டியும் கராச்சியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி, டிம் சௌதி (கேப்டன்), மேட் ஹென்ரி, அஜாஸ் படேல். 

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், ஹசன் அலி, நசீம் ஷா, மிர்  ஹம்ஸா, அப்ரார் அகமது.

டி20 கிரிக்கெட்டில் அபாரமான சாதனையை படைத்து ஜடேஜாவை ஓரங்கட்டிய அக்ஸர் படேல்..!

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே - டாம் லேதம் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். டாம் லேதம் 71 ரன்கள் அடிக்க, சதமடித்த டெவான் கான்வே 122 ரன்களை குவித்தார். அதன்பின்னர் டாம் பிளண்டெல் 51 ரன்களும், 10ம் வரிசையில் இறங்கிய டெயிலெண்டர் மேட் ஹென்ரி 68 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் 449 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் அபாரமாக ஆடி சதமடித்த சௌத் ஷகீல், 125 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை. இமாம் உல் ஹக் 83 ரன்களும், சர்ஃபராஸ் அகமது 78 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 408 ரன்கள் அடித்தது.

41 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பேட்டிங் ஆடினர். தொடக்க வீரர் டாம் லேதம் 62 ரன்களும், மிடில் ஆர்டரில் டாம் பிளண்டெல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகிய இருவரும் தலா 74 ரன்களும் அடிக்க, 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் அடித்து 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி.

மொத்தமாக 318 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 319 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்தது. கடைசி நாள் ஆட்டத்தில் 319 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷாஃபிக்(0), மிர் ஹம்சா (0), இமாம் உல் ஹக் (12), ஷான் மசூத்(35), பாபர் அசாம்(27) ஆகியோர் ஏமாற்றமளிக்க பாகிஸ்தான் அணி 80 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

சின்ன பசங்க தானே.. அவசரப்படக்கூடாது.. போகப்போக சரி ஆகிடுவாங்க..! இளம் வீரர்கள் மீது ராகுல் டிராவிட் நம்பிக்கை

அதன்பின்னர் சர்ஃபராஸ் அகமதுவும் சௌத் ஷகீலும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி இலக்கை விரட்டினர். சர்ஃபராஸ் அகமதுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடிய சௌத் ஷகீல் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் சர்ஃபராஸுடன் ஜோடி சேர்ந்த அகா சல்மான் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும், நிலைத்து நின்று ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4வது சதத்தை விளாசிய சர்ஃபராஸ் அகமது, 118 ரன்கள் அடித்து 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். வெற்றிக்காக கடுமையாக போராடிய சர்ஃபராஸ், வெற்றியை நெருங்கியபோது ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பின், பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பு பறிபோனது. ஆனால் அதன்பின்னர் ஒருசில ஓவர்கள் மிஞ்சியிருந்தும் அதில் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் நியூசிலாந்து வெற்றி வாய்ப்பை தவறவிட, இந்த போட்டியும் டிராவில் முடிந்தது.
 

click me!