ரிஷப் பண்ட் சிகிச்சை பெறும் மருத்துவமனை புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ஊர்வசி ரவுத்தலா!

Published : Jan 06, 2023, 05:52 PM IST
ரிஷப் பண்ட் சிகிச்சை பெறும் மருத்துவமனை புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ஊர்வசி ரவுத்தலா!

சுருக்கம்

மும்பையில் உள்ள கோகிலாபென் திருபானி அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா ரிஷப் பண்ட் சிகிச்சை பெறும் கோகிலாபென் மருத்துவமனையின் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி ரிஷப் பண்ட் சென்ற கார் டெல்லி - டேராடூன் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்த நிலையில், டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சின்ன பசங்க தானே.. அவசரப்படக்கூடாது.. போகப்போக சரி ஆகிடுவாங்க..! இளம் வீரர்கள் மீது ராகுல் டிராவிட் நம்பிக்கை

ஆர்த்ரோஸ்கோபி, தோள்பட்டை சேவையின் இயக்குநர் டாக்டர் டின்ஷா பார்திவாலாவின் நேரடி மேற்பார்வையில் இருக்கிறார். மேலும், அறுவை சிகிச்சை மற்றும் தசைநார் கிழிதலுக்கான பரிசோதனை என்று அடுத்தடுத்த நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார். ரிஷப் பண்ட் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளும் பிசிசிஐ மருத்துவ குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும், இந்த காலகட்டத்தில் ரிஷப் பண்ட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிசிசிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுமா?

இந்த நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா, தற்போது ரிஷப் பண்ட் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிடுந்தார். இன்று அவர் மருத்துவமனை புகைப்படத்தை பகிர்ந்திருப்பது, அவரை நேரில் சென்று பார்த்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ரிஷப் பண்ட் மற்றும் ஊர்வசி ரவுத்தலா இருவரும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்திய கிரிக்கெட்டின் ஹீரோ: இளம் வயதில் உலகக் கோப்பையை கைப்பற்றிய கபில் தேவ் பிறந்த நாள் இன்று!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!