ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுமா?

By Rsiva kumarFirst Published Jan 6, 2023, 4:41 PM IST
Highlights

இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது கடைசி டி20 போட்டியில் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று நடந்த 2ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.

பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்: தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 200 ரன்களுக்கு மேல் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இதைத் தொடர்ந்து 207 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேல் ஆக்ரோஷமாக ஆடி 31 பந்துகளில் 3 ஹாட்ரிக் சிக்சர்கள் உள்பட 6 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய கிரிக்கெட்டின் ஹீரோ: இளம் வயதில் உலகக் கோப்பையை கைப்பற்றிய கபில் தேவ் பிறந்த நாள் இன்று!

இந்திய அணியின் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 5 நோபால் வீசி வெறும் 2 ஓவர்களில் 37 ரன்கள் அள்ளிக் கொடுத்தார். ஷிவம் மாவி 4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்தார். இதில், ஒரு நோபால் மற்றும் 2 வைடும் அடங்கும். உம்ரான் மாலிக் 4 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்தார். இதில், ஒரு நோபால் மற்றும் ஒரு வைடு அடங்கும். இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் டி20 போட்டியில் இடம் பெற்றுள்ள முகேஷ் குமார் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று அணியில் இடம் பெற்றுள்ள ருதுராஜ் கெய்வாட்டும், சுப்மன் கில்லுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதுவரை நடந்த 2 போட்டியிகளில் சுப்மன் கில் 7 மற்றும் 5 ரன்கள் வீதம் மொத்தம் 12 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த கேப்டன்களில் ரோகித் சர்மா நம்பர்!

இதுவரை ஒரு சர்வதேச மற்றும் ஐபிஎல் சீசன்களில் கூட ஆடாத வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமாரை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.5.5 கோடிக்கு நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது. இலங்கைக்கு எதிரான டி20 அணியில் இடம் பெற்றுள்ள அவர் இதுவரை ஒரு டி20 போட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. ஆகையால், அவர் நாளை நடக்கும் போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபக் கூடாவிற்குப் பதிலாக ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20: இந்தியா செய்த மிஸ்டேக்ஸ் என்னென்ன தெரியுமா?

click me!