ஸ்டோய்னிஸ் அதிரடி அரைசதமடித்து செம ஃபினிஷிங்! சிட்னி சிக்ஸர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த மெல்பர்ன் ஸ்டார்ஸ்

By karthikeyan VFirst Published Jan 6, 2023, 2:55 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடியான ஃபினிஷிங்கால் 20 ஓவரில்  ரன்களை குவித்த மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி,  ரன்கள் என்ற சவாலான இலக்கை சிட்னி சிக்ஸர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று மெல்பர்னில் நடந்துவரும் போட்டியில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

சிட்னி சிக்ஸர்ஸ் அணி:

ஜோஷ் ஃபிலிப் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் வின்ஸ், டேனியல் ஹியூக்ஸ், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் (கேப்டன்), ஜோர்டான் சில்க், டேனியல் கிறிஸ்டியன், ஹைடன் கெர், சீன் அபாட், கிறிஸ் ஜோர்டான், டாட் மர்ஃபி, இஜாருல்ஹக் நவீத்.

2023 ஆசிய கோப்பை: ஒரே குழுவில் இந்தியா - பாகிஸ்தான்..! 2023 - 2024ம் ஆண்டுக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி:

ஜோ கிளார்க் (விக்கெட் கீப்பர்), தாமஸ் ரோஜர்ஸ், பியூ வெப்ஸ்டெர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹில்டன் கார்ட்ரைட், நிக் லார்கின், காம்ப்பெல் கெல்லாவே நேதன் குல்ட்டர்நைல், லுக் உட், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா (கேப்டன்).

முதலில் பேட்டிங் ஆடிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோ கிளார்க் 15 பந்தில் 12 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான தாமஸ் ரோஜர்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி 33 பந்தில் 48 ரன்களை விளாசி 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஹில்டன் கார்ட்ரைட் 31 பந்தில் 36 ரன்கள் அடித்தார்.

ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை பண்ணுங்க..! இந்திய அணிக்கு கம்பீர் உருப்படியான அட்வைஸ்

அதன்பின்னர் இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 28 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடியான ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 173 ரன்களை குவித்த மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி 174 ரன்கள் என்ற இலக்கை சிட்னி சிக்ஸர்ஸுக்கு நிர்ணயித்தது.
 

click me!