இது 6ஆவது முறை: அஸ்வினைப் போன்று யாரும் மோசமாக நடத்தப்படவில்லை – சுனில் கவாஸ்கர்!

By Rsiva kumar  |  First Published Jun 13, 2023, 11:25 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறாதது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்து 173 ரன்கள் பின் தங்கியிருந்தது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தோனி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்!

Tap to resize

Latest Videos

பின்னர், 443 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி ஆடியது. இதில், ரோகித் சர்மா 43 ரன்களும், விராட் கோலி 49 ரன்களும், அஜிங்கியா ரஹானே 46 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

TNPL 2023: கடைசி வரை போராடிய துஷார் ரஹேஜா: ஓபனிங் மேட்சிலேயே 70ல் ஜெயிச்ச லைகா கோவை கிங்ஸ்!

இந்த தோல்வியின் மூலமாக 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. கடந்த முறையும் இங்கிலாந்தில் தான் டெஸ்ட் போட்டி நடந்தது. இந்த முறையும் இங்கிலாந்தில் தான் டெஸ்ட் நடந்துள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டுமென்றால் அங்கே 20 நாட்களுக்கு முன்னதாக சென்றிட வேண்டும்.

மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட கேஎல் ராகுல்: வைரலாகும் மாணவனின் வீடியோ!

மேலும், பயிற்சி போட்டியிலும் விளையாட வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் இந்திய அணி ஐபிஎல் தொடரை முடித்து ஒரு வாரத்திற்கு முன்பு தான் இங்கிலாந்து சென்றது. அங்கு, ஒரு வாரம் பயிற்சி செய்தனர். இது ஒரு காரணமாகவும் சொல்லப்படுகிறது.

இரண்டாவது காரணம், டாஸ் ஜெயிச்சு, பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு சாதகமான ஓவல் மைதானத்தில் டாஸ் சாதகமாக விழும்போதே அதனை சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் பவுலிங் தேர்வு செய்து தவறான முடிவு எடுத்து விட்டார்.

TNPL 2023: ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய விஜய் சங்கர்: ஐபிஎல்லில் விட்டதிலிருந்து தொடங்கிய சாய் சுதர்ஷன்!

மூன்றாவது காரணம், ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்யாதது. உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரராக அஸ்வின் இந்திய பிளேயிங் 11ல் இடம் பெற்றிருக்க வேண்டும். பார்டர் கவாஸ்கர் டிராபியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்து வீசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியிருப்பதாவது: நவீன யுகத்தில் எந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் அஷ்வினை போல மோசமாக நடத்தப்பட்டதில்லை.

TNPL 2023: ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய விஜய் சங்கர்: ஐபிஎல்லில் விட்டதிலிருந்து தொடங்கிய சாய் சுதர்ஷன்!

அணியில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் இருந்தால் அவரால் சுழற்பந்துக்கு சாதகமான பிட்சில் ஆட முடியாது. புல் அதிகம் இருக்கும் பிட்சில் கூட ஆட முடியாது. இப்படியெல்லாம் காரணம் சொல்லி சொல்லி பிளேயிங் 11ல் கூட ஆடாமல் இருப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அஷ்வின் மட்டும் பிளேயிங் 11ல் இருந்திருந்தால் நினைத்துப் பாருங்கள், அவர் பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்திருப்பார். இது முதல் முறை அல்ல. இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் இடம் பெறாமல் இருப்பது இது 6ஆவது முறையாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அஷ்வின் இடம் பெறவில்லை.

IPL 2024: ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை விடுவிடுக்கும் குஜராத் டைட்டன்ஸ்!

ஆனால், கடைசியாக இங்கிலாந்தில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பதாவது: முதல் நாளில் முதலே ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். முதல் இன்னிங்ஸில் இந்தியா பெரிய அளவில் பேட்டிங் செய்ய வேண்டியிருந்தது, ஆனால் அவர்களால் முடியவில்லை.

இந்தியாவிற்கு நல்ல வாய்ப்புகள் இருந்தும், பிளேயிங் 11ல் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்து வீச்சாளரான அஸ்வின் அணியில் இடம் பெறாததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் டாப் 8 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.

click me!