Bangladesh vs New Zealand 2nd Test Day 1: வங்கதேசம் 172க்கு அவுட் – நியூசிலாந்து 55/5 ரன்கள் எடுத்து திணறல்!

By Rsiva kumarFirst Published Dec 6, 2023, 9:28 PM IST
Highlights

வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார். ஆனால், அவர் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். பந்தை கையால் தடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

டேனியல் வியாட், நாட் ஸ்கிவர் பிரண்ட் அதிரடி - இங்கிலாந்து மகளிர் அணி 197 ரன்கள் குவிப்பு!

Latest Videos

பவுலிங்கில் தரப்பில் நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகளும், மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். அஜாஸ் படேல் 2 விக்கெட்டும், டிம் சவுதி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை நியூசிலாந்து அணி ஆடியது. இதில், டாம் லாதம் 4 ரன்னும், டெவான் கான்வே 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேன் வில்லியம்சன் 13 ரன்னிலும், ஹென்ரி நிக்கோல்ஸ் ஒரு ரன்னிலும் வெளியேறினர்.

நடிகை அவ்னீத் கவுருடன் சுற்றுலா சென்ற சுப்மன் கில் – வைரலாகும் புகைப்படம்!

அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டாம் ப்ளண்டெல் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் முறையில் நடையை கட்டினார். இதையடுத்து டேரில் மிட்செல் 12 ரன்னுடனும், கிளென் பிலிப்ஸ் 5 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் வங்கதேச அணியில் மெஹிடி ஹாசன் மிராஸ் 3 விக்கெட்டும், தைஜூல் இஸ்லாம் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Dhaka Test: பந்தை கையால் தடுத்து வித்தியாசமான முறையில் தானாகவே ஆட்டமிழந்த வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்!

click me!