டேனியல் வியாட், நாட் ஸ்கிவர் பிரண்ட் அதிரடி - இங்கிலாந்து மகளிர் அணி 197 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumarFirst Published Dec 6, 2023, 8:59 PM IST
Highlights

இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், இந்திய மகளிர் அணி முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது.

INDW vs ENGW First T20I:டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு – ஷ்ரேயங்கா பாட்டீல், சைகா இஷாக் அறிமுகம்!

Latest Videos

சோபியா டங்க்லி மற்றும் டேனியல் வியாட் இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இதில், டங்க்லி 1 ரன் எடுத்த நிலையில், முதல் ஓவரின் 4ஆவது பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆலிஸ் கோப்ஸி கோல்டன் டக் முறையில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். முதல் ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 2 ரன்னுக்கு 2 விக்கெட் எடுத்திருந்தது.

நடிகை அவ்னீத் கவுருடன் சுற்றுலா சென்ற சுப்மன் கில் – வைரலாகும் புகைப்படம்!

பின்னர் வந்த நாட் ஸ்கிவர் பிரண்ட் மற்றும் டேனியல் வியாட் இருவரும் அதிரடியாக விளையாடினர். ஒரு கட்டத்தில் இருவரும் அரைசதம் அடித்தனர். மூன்றாவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 138 ரன்கள் குவித்தது. டேனியல் வியாட் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதே போன்று, நாட் ஸ்கிவர் 53 பந்துகளில் 13 பவுண்டரி உள்பட 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Dhaka Test: பந்தை கையால் தடுத்து வித்தியாசமான முறையில் தானாகவே ஆட்டமிழந்த வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்!

அடுத்து வந்த கேப்டன் ஹீதர் நைட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆமி ஜோன்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க, ஃப்ரேயா கெம்ப் 5 ரன்கள் எடுக்கவே இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளும், ஷ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டும், சைகா இஷாக் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து கடின இலக்கை துரத்தி இந்திய மகளிர் அணி விளையாடுகிறது.

மூளை பக்கவாதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை: தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்து தீபக் சாஹர் விலகல்?

click me!