இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று மும்பையில் நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங் செய்கிறது.
நடிகை அவ்னீத் கவுருடன் சுற்றுலா சென்ற சுப்மன் கில் – வைரலாகும் புகைப்படம்!
இன்று நடக்கும் முதல் போட்டியின் மூலமாக ஷ்ரேயங்கா பாட்டீல் மற்றும் சைகா இஷாக் இருவரும் இந்திய அணியில் அறிமுகமாகின்றனர்.
இந்திய மகளிர் அணி:
ஸ்மிருது மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயங்கா பாட்டீல், கனிகா அகுஜா, பூஜா வஸ்ட்ரேகர், ரேணுகா தாகூர் சிங், சைகா இஷாக்.
இங்கிலாந்து மகளிர் அணி:
டேனியல் வியாட், சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), ஆமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), ஃப்ரேயா கெம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளான், லாரன் பெல், மஹிகா கவுர்.