டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்; புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம்!

By Rsiva kumar  |  First Published Jun 23, 2023, 10:40 AM IST

சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் லீக் போட்டியின் 13 ஆவது போட்டி நேற்று திண்டுக்கல் என்பிஆர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

சுஜய் அதிரடி ஆட்டம்; லைகா கோவை கிங்ஸ் சிம்பிள் வெற்றி!

Tap to resize

Latest Videos

அதன்படி முதலில் ஆடிய களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் கௌசிக் காந்தி அதிகபட்சமாக 51 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 16 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டியின் 16ஆவது ஓவரின் போது மழை குறுக்கீடு இருந்ததால், போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்த சுனில் சேத்தரி; இந்தியா வெற்றி!

இதையடுத்து டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு 129 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய நெல்லை அணியில் தொடக்க வீரர்கள் ஸ்ரீ நிரஞ்சன் 14 ரன்களிலும், கேப்டன் அருண் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அஜிதேஷ் குருசாமி நிலைத்து நின்று ஆடி 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரித்திக் ஈஸ்வரன் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்தியா, பாகிஸ்தான் வீரர்களிடையே மோதல்: இந்திய பயிற்சியாளர் வெளியேற்றம்!

கடைசியாக வந்த லக்‌ஷ்மேஷா சூர்யபிரகாஷ் 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரி உள்பட 33 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக 15.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.

இதே போன்று சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி கண்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

ரூ.2000 கோடி மதிப்பிலான ட்ரோன் நிறுவனத்தை நடத்தி வரும் தோனியின் பிஸினஸ் பார்ட்னர்!

click me!