லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பா11சி திருச்சி அணி 117 ரன்கள் குவித்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 12 ஆவது போட்டியில் பா11சி திருச்சி அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பா11சி திருச்சி அணியின் கேப்டன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அக்ஷய ஸ்ரீநிவாசன், மணி பாரதி, பெர்ராரிரோ ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ரூ.2000 கோடி மதிப்பிலான ட்ரோன் நிறுவனத்தை நடத்தி வரும் தோனியின் பிஸினஸ் பார்ட்னர்!
ஜாஃபர் ஜமால் 11 ரன்களில் வெளியேறினார். ராஜ்குமார் கடைசி நேரத்தில் கை கொடுக்க பா11சி திருச்சி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 118 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட லைகா கோவை கிங்ஸ் தற்போது விளையாடி வருகிறது. இதுவரையில் விளையாடிய 2 போட்டிகளிலும் பா11சி திருச்சி அணி 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. ஆனால், லைகா கோவை கிங்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.
1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!