1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!

By Rsiva kumar  |  First Published Jun 21, 2023, 7:30 PM IST

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் 11ஆவது போட்டி இன்று நடந்தது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

திண்டுக்கல் டிராகன்ஸ்:

Tap to resize

Latest Videos

ஷிவன் சிங், எஸ் அருண், பாபா இந்திரஜித், சி சரத் குமார், சுபோத் பதி, ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), பூபதி குமார், எம் மதிவாணன், பி சரவண குமார், ஆதித்யா கணேஷ், ராகுல்.

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்:

என் ஜெகதீசன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சந்தோஷ் ஷிவ், பாபா அபாரஜித், சஞ்சய் யாதவ், உதிரசாமி சசிதேவ், எஸ் ஹரிஷ் குமார், ராமலிங்கம் ரோகித், ராகில் ஷா, எம் சிலம்பரசன், ராக்கி பாஸ்கர், லோகேஷ் ராஜ்

அறுவை சிகிச்சைக்கு பிறகு தோனி எப்படி இருக்கிறார்? எப்போது விளையாடுவார்? சிஎஸ்கே சிஇஓ ஓபன் டாக்!

இதில், தொடக்க வீரர்கள் ராகுல் 20 ரன்னிலும், சிவம் சிங் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பாபா இந்திரஜித், பூபதி குமார் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அஸ்வின் 6 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆதித்யா கணேஷ் மற்றும் சி சரத் குமார் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். ஆதித்யா கணேஷ் 30 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆதித்யா கணேஷ், சுபோத் பதி அதிரடியால் திண்டுக்கல் டிராகன்ஸ் 170 ரன்கள் குவிப்பு!

சரத் குமார் 21 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து வந்த சுபோத் பதி 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி தத்தளித்த போது, ஆதித்யா கணேஷ் மற்றும் சரத் குமார் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்டர்னர்ஷிப் சேர்த்தனர். இறுதியாக திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.

டிக்ளேர் செய்ததில் துளி கூட கவலையில்லை; நெக்ஸ் போட்டியில் இதை விட அதிரடியாக ஆடுவோம்: பென் ஸ்டோக்ஸ்!

பின்னர் 171 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணி விளையாடியது. இதில், கேப்டன் ஜெகதீசன் 37 ரன்கள் சேர்த்தார். பாபா அபாரஜித் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக சேப்பாக்கம் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, கடைசி ஓவரை சரவணக் குமார் வீசினார். முதல் பந்தில் ராமலிங்கம் ரோகித் பவுண்டரி விளாசினார்.

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் – சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் பவுலிங்!

ஆனால், அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லோகேஷ் ராஜ் 3ஆவது பந்தில் பவுண்டரி விளாசினார். 4ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இறுதியாக கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 5ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க ஓடிய போது சசிதேவ் ரன் அவுட்டானார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2 ரன்கள் எடுத்தால் டிரா ஆகும் என்று நினைத்து ராகில் ஓடிய போது ரன் அவுட் செய்யப்பட்டார். இறுதியாக சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

13 சிக்ஸர், 3 பவுண்டரி, 4 விக்கெட், புனேரி அணியை விரட்டி விரட்டி அடித்த 18 வயது வீரர் அர்சின் குல்கர்னி!

கடைசி ஓவர் வீசிய சரவணக் குமார் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அஸ்வின் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில், வெற்றி பெற்றதன் மூலமாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

click me!