சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி அறுவை சிகிச்சைக்கு பிறகு வேகமாக குணமடைந்து வருவதாக அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில், இந்த சீசனின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. முக்கியமான தொடர் என்பதால் ஆரம்பகட்டத்தில் முதற்கட்ட சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார். மேலும், ஒவ்வொரு போட்டியிலும் காலில் நர்ஸிங் செய்த நிலையில் தான் விளையாடியிருக்கிறார். மேலும், வேகமாக ஓட முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
ஆதித்யா கணேஷ், சுபோத் பதி அதிரடியால் திண்டுக்கல் டிராகன்ஸ் 170 ரன்கள் குவிப்பு!
இதையடுத்து, இறுதிப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதன் பிறகு கடந்த 1 ஆம் தேதி மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து 2 நாட்களுக்குப் பிறகு தோனி தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.
டிக்ளேர் செய்ததில் துளி கூட கவலையில்லை; நெக்ஸ் போட்டியில் இதை விட அதிரடியாக ஆடுவோம்: பென் ஸ்டோக்ஸ்!
இந்த நிலையில், தோனியின் உடல்நிலை குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார். முழங்காலில் காயமடைந்த தோனியிடம் சென்று விளையாட முடியுமா என்று கேட்கவில்லை. அவரே தன்னால் முடியவில்லை என்றால் உடனே நேரடியாக சொல்லிவிடுவார்.
ஹாட்ரிக் வெற்றியை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் – சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் பவுலிங்!
இறுதிப்போட்டி முடியும் வரையில் தோனி தனது காயம் பற்றி எதையும் எங்களிடம் கூறவில்லை. இறுதிப் போட்டிக்குப் பிறகு காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் என்று எங்களிடம் கூறினார். ராஞ்சியில் ஓய்வில் இருக்கும் அவர் தற்போது அவர் குணமடைந்து வருகிறார். இன்னும் ஒரு சில வாரங்கள் ஓய்வில் இருந்து விட்டு அதன் பிறகு தான் தனது பயிற்சியை தொடங்குவார். வரும் பிப்ரவரி மாதம் வரையில் அவர் விளையாடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.