ஐபிஎல் இந்த 2 சாதனையும் இவங்களால தான் முடியும்; இன்னும் யாரும் முறியடிக்கல!

By Rsiva kumarFirst Published Mar 28, 2023, 5:12 PM IST
Highlights

அதிக சிக்சர்கள் விளாசிய அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.
 

பிசிசிஐ மூலமாக கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கிரிக்கெட் திருவிழா தான் ஐபிஎல். இந்தியன் பிரீமியர் லீக் என்று சொல்லப்படும் இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பமாகிறது. இந்த சீசனின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

100 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை, 101ஆவது பந்தில் விக்கெட்: தட்டி தூக்கிய ரஷீத் கான் சாதனை!

இதுவரையில் நடந்த 15 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 1408 சிக்சர்கள் வரையில் விளாசி நம்பர் 1 இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி 5 முறை கோப்பையை கைப்பற்றிய அணியாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1377 சிக்சர்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

ஐபிஎல்லில் 701 பவுண்டரிகள், 136 சிக்சர்கள் அடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஷிகர் தவான்!

அணி வாரியாக அதிக சிக்சர்கள் அடித்த அணிகளின் பட்டியல்:

  1. மும்பை இந்தியன்ஸ் - 1408
  2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 1377
  3. பஞ்சாப் கிங்ஸ் - 1276
  4. சென்னை சூப்பர் கிங்ஸ் - 1268
  5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 1226
  6. டெல்லி கேபிடல்ஸ் - 1147
  7. ராஜஸ்தான் ராயல்ஸ் - 1011
  8. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - 777
  9. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - 115
  10. 79 - குஜராத் டைட்டன்ஸ்

கையில் சுரைக்காயோடு எண்ட்ரி கொடுத்து தத்துவம் பேசிய லாக்கி ஃபெர்குசன் - வைரலாகும் வீடியோ!

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் நடந்த 15 ஐபிஎல் சீசன்களில் முறையே, 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி டைட்டில் வென்றுள்ளது. இந்த 5 சீசன்களிலும் ரோகித் சர்மா தான் கேப்டனாக இருந்துள்ளார். அதிக முறை டைட்டில் வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்திலும், 4 முறை டைட்டில் வென்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ஆவது இடத்திலும் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை டைட்டில் வென்று 3ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜஸ் ஆகிய அணிகள் தலா ஒரேயொரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. 

click me!