கையில் 15 தையலுடன் களமிறங்கி சதமடித்தார் விராட் கோலி - சஞ்சய் பங்கார்

By karthikeyan VFirst Published Mar 28, 2023, 4:02 PM IST
Highlights

ஐபிஎல்லில் கையில் 15 தையலுடன் களமிறங்கி விராட் கோலி அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார் சஞ்சய் பங்கார்.
 

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் 5 முறையும், சிஎஸ்கே அணி 4 முறையும் கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழும் அதேவேளையில், ஆர்சிபி  அணி ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்பது அந்த அணிக்கு பெரிய வருத்தமே.

விராட் கோலி, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் என மிகப்பெரிய வீரர்கள் ஆர்சிபி அணியில் ஆடியும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஐபிஎல்லில் 15 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து இன்று வரை ஆர்சிபி அணியில் தான் ஆடிவருகிறார் விராட் கோலி. ஐபிஎல்லில் 15 சீசன்கள் ஒரே அணிக்காக ஆடிய முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். விராட் கோலியை தவிர மற்ற அனைத்து வீரர்களுமே வெவ்வேறு அணிகளுக்கு ஆடியிருக்கிறார்கள்.

IPL 2023: விதி வலியது.. எல்லா அணிகளும் புறக்கணித்த சந்தீப் ஷர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

விராட் கோலி ஆர்சிபியில் 15 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், அதை கொண்டாடும் விதமாக ஐபிஎல் பிராட்கேஸ்டரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல், ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரிடமும் விராட் கோலியுடன் இணைந்து ஆடிய அனுபவம் கேட்டறிந்து வீடியோவாக வெளியிட்டது.

அந்த வீடியோவில் பேசியிருந்த ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கார் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். விராட் கோலி கையில் 15 தையல்களுடன் களமிறங்கி சதமடித்த சம்பவத்தை பகிர்ந்தார்.

இதுகுறித்து பேசிய சஞ்சய் பங்கார், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டி என்று நினைக்கிறேன்.. அந்த போட்டியில் விராட் கோலி கையில் 15 தையல்கள் போடப்பட்டிருந்த நிலையில், அப்படியே களமிறங்கி சதமடித்தார். இவ்வளவுக்கும் அது 15 ஓவர் போட்டி.. அந்த போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்தார் கோலி என்று சஞ்சய் பங்கார் தெரிவித்தார்.

சஞ்சய் பங்கார் குறிப்பிட்டுள்ள அந்த போட்டி, 2016 ஐபிஎல்லில் ஆர்சிபி - பஞ்சாப் இடையேயான போட்டி. 2016 ஐபிஎல் தான் கோலியின் ஐபிஎல் கெரியரில் மிகச்சிறந்த சீசன். அந்த சீசனில் 4 சதங்களுடன்  973 ரன்களை குவித்து, ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். 

IPL 2023: புதிய கேப்டனின் கீழ் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன்

ஆர்சிபி - பஞ்சாப் இடையேயான அந்த குறிப்பிட்ட போட்டி 15 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி அபாரமாக பேட்டிங் ஆடி 50 பந்தில் 113 ரன்களை குவித்தார். கோலியும் கெய்லும் இணைந்து 147 ரன்களை குவித்தனர். அந்த போட்டியில் 15 ஓவரில் 211 ரன்களை குவித்து ஜெயித்தது ஆர்சிபி அணி.
 

click me!