அந்த பையன் இந்தியாவிற்கு ஆட ரெடி ஆகிட்டான்.. ரோஹித்துக்கும் அது தெரியும்.. உடனே டீம்ல எடுங்க! கங்குலி கருத்து

By karthikeyan VFirst Published Mar 28, 2023, 3:13 PM IST
Highlights

பிரித்வி ஷா இந்திய அணிக்கு ஆட தயாராகிவிட்டதாகவும், கேப்டன் ரோஹித் சர்மாவும் அணி தேர்வாளர்களும் கண்டிப்பாக அவரை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்றும் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக திகழும் ஏகப்பட்ட இளம் வீரர்களில் பிரித்வி ஷா முக்கியமான வீரர். இந்திய டெஸ்ட் அணியில் 2018ம் ஆண்டே இடம்பிடித்த பிரித்வி ஷா, காயம் காரணமாக இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறிவருகிறார். 

மற்ற இளம் வீரர்களைவிட விரைவில் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர் பிரித்வி ஷா. அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் அடித்து சாதனை படைத்த வீரர் பிரித்வி ஷா. அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இவரை சச்சின், லாரா, சேவாக் ஆகியோர் கலந்த கவலை என்று புகழாரம் சூட்டியிருந்தார். ஆனால் அவரது ஃபிட்னெஸ் பிரச்னையால் தனக்கான வாய்ப்பை இழந்தார். அந்த காலக்கட்டத்தில், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டனர்.

IPL 2023: புதிய கேப்டனின் கீழ் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன்

ஆனால் பிரித்வி ஷாவின் பேட்டிங் திறமை அனைவரும் அறிந்ததுதான். இயல்பாகவே மிகச்சிறந்த பேட்டிங் திறமையை கொண்ட அசாத்திய வீரர். அசாதாரணமான இன்னிங்ஸ்களை அவ்வப்போது ஆடி அசத்திவிடுவார். மிகத்திறமையான வீரராக இருந்தும் கூட, இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிரித்வி ஷாவுக்கு மீண்டும் இடம் கிடைக்கவில்லை. அதன்பின்னர் எத்தனையோ இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தபோதிலும், பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 339 ரன்களையும், 6 ஒருநாள் போட்டிகளில் ஆடி 189 ரன்களையும்  அடித்துள்ளார். ஒரேயொரு டி20 போட்டியில் மட்டும் ஆடியுள்ள பிரித்வி ஷா, அந்த போட்டியிலும் கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார். 

ஆனால் உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல் போட்டிகளில் அபாரமாக பேட்டிங் ஆடி பல சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். பிரித்வி ஷாவை இந்திய அணியில் எடுத்து ஆடவைக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர், முரளி விஜய் ஆகிய முன்னாள் வீரர்கள் வலியுறுத்திவரும் நிலையில், பிரித்வி ஷா இந்திய அணிக்கு ஆட தயாராகிவிட்டதாக சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

IPL 2023: விதி வலியது.. எல்லா அணிகளும் புறக்கணித்த சந்தீப் ஷர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

இதுகுறித்து பேசிய சௌரவ் கங்குலி, பிரித்வி ஷா இந்திய அணிக்கு ஆட  தயாராகிவிட்டார். ஆனால் அவருக்கு அணியில் காலியாக இருக்கும் இடத்தை பொறுத்துத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதும் கிடைக்காமல் போவதும்.. ஆனால் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் பிரித்வி ஷாவை கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்பதை உறுதியாக நான் அறிவேன். பிரித்வி ஷா மிகச்சிறந்த வீரர். அவர் இந்தியாவிற்கு ஆட ரெடி என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
 

click me!