உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்‌ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!

Published : May 24, 2023, 12:27 PM IST
உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்‌ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!

சுருக்கம்

தோனி மற்றும் சாக்‌ஷி தோனி இருவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.1071 கோடி என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில், எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் உள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இருவரும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்கிறார்கள். மேலும், பல விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கிறார்கள்.

பத்திரனாவுக்காக ரிஸ்க் எடுத்து 5 நிமிடம் மைதானத்தில் நடுவருடன் வாக்குவாதம் செய்த தோனி!

பைனான்சியல் எக்ஸ்பிரஸ் கூற்றுப்படி, தோனியின் நிகர மதிப்பு ரூ.1030 கோடி. இது தவிர, ஸ்போர்ட்ஸ்கீடா, என்ற நிறுவனத்தின் கூற்றுப்படி சாக்‌ஷி தோனியின் சொத்து மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.41 கோடி. தோனி மற்றும் சாக்‌ஷி தோனி இருவரது மொத்த சொத்த மதிப்பு என்று பார்த்தால் ரூ.1071 கோடி. இது தோனியை உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக்கியுள்ளது.

சிஎஸ்கே வீரர்கள் அவுட்டாக அவுட்டாக வருத்தமாக ரியாக்‌ஷன் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்!

உலகின் பணக்கார கிரிக்கெட்டர்களில் ஒருவராக கருதப்படும் தோனி, ஐபிஎல் மூலமாக அதிக வருமானம் ஈட்டுகிறார். அதிக சம்பளம் வாங்கும் ஐபிஎல் வீரர்களில் தோனியும் ஒருவர். அவர் ரூ.12 கோடி வரையில் ஐபிஎல் மூலமாக சம்பளம் ஈட்டுகிறார்.

விஜய் சங்கரை மான்கட் முறையில் ஆட்டமிழக்க முயற்சித்த தீபக் சாஹர் – கூலாக சிரித்த எம்.எஸ்.!

கடந்த 16 ஐபிஎல் சீசன்கள் மூலமாக இதுவரையில் தோனி ரூ.178 கோடி வரையில் வருமானம் ஈட்டியுள்ளார். இது தவிர தோனி மற்றும் சாக்‌ஷி தோனிக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து மதிப்பு என்று பார்க்கையில், ராஞ்சியில் ரூ.10 கோடி மதிப்பு கொண்ட ஒரு பண்ணை வீடு இருக்கிறது. அங்கு தான் தோனி, சாக்‌ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் வசிக்கிறார்கள்.

கோட்டையில் வரலாற்றை மாற்றியமைத்து 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற சிஎஸ்கே!

இதுதவிர டேராடூனில் ரூ.17.8 கோடிக்கு வீடு ஒன்று உள்ளது. மேலும், வாகனங்கள் மீது அதிக பற்று கொண்ட தோனியிடம் ஹம்மர் H2, ஆடி க்யூ 7, மிட்சுபிஷி பஜேரோ எஸ்.எஃப்.எக்ஸ், லேண்ட் ரோவர் ப்ரீலேன்சர், மஹிந்திரா ஸ்கார்பியோ, பெர்ராரி 599 ஜிடிஓ, ஜீப் கிராண்ட் செரோக்கி, டிராகாக், நிசான் ஜோங்கா, மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்இ, ரோல்ஸ் ஷாட்ரோஸ், ஹிந்துஸ்தான் அம்பாடோர்ஸ் ஆகிய வாகனங்கள் உள்ளன.

தோனி எனது நண்பர், சகோதரர்; நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - ஹர்திக் பாண்டியா!

மேலும், ஆர்கானிக் ஃபார்மிங், ட்ரோன்கள், விளையாட்டு உடைகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் என பலதரப்பட்ட வணிகங்களையும் தோனி சொந்தமாக வைத்துள்ளார். இவற்றின் மூலமாக ஆண்டு தோறும் ரூ. 4 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஃபி மீதான தோனியின் காதல் பற்றி தெரியுமா? சுரேஷின் காஃபி மீது தோனி கொண்ட காதல்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 3வது ODI: ரோஹித் சர்மா புதிய உலக சாதனை; சச்சின்-லாரா கிளப்பில் இணைந்த ஹிட்மேன்..!
Ind Vs SA: பிரசித், குல்தீப் மாயாஜாலம்.. 270 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா..! தொடரை வெல்லும் இந்தியா..?