மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் நிகழ்ச்சியின் போது ரோகித் சர்மா, ஷிகர் தவானின் பஞ்சாப் ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 46ஆவது ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் தனது நண்பரான ஷிகர் தவானிடம் என்ன செய்யவது என்று கேட்டார். அதற்கு அவரோ பவுலிங் என்று சொல்லவே, ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இது ரோகித் சர்மாவின் 200ஆவது ஐபிஎல் போட்டியாகும்.
ஐபிஎல் வரலாற்றில் 2ஆவது முறையாக ரத்தான போட்டி: இரு அணிகளுக்கும் புள்ளி; ரசிகர்கள் ஏமாற்றம்!
இதையடுத்து எப்போதும் ஷிகர் தவான் கேட்ச் பிடிக்கும் போது போ பஞ்சாப் ஸ்டைலில் போஸ் கொடுப்பார் அல்லவா, அதே போன்று ஷிகர் தவான் உடன் இணைந்து அதே போஸ் கொடுத்தார். இதனை பார்க்கும் போது மாற்றான் படத்தில் வரும் சூர்யாவைப் போன்று ஒற்றிப் பிறந்த இரட்டையர்கள் போன்று இருவரும் போஸ் கொடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை பவுலிங் தேர்வு செய்ததைத் தொடர்ந்து முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிராப்சிம்ரன் சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 30 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேத்யூ வேட் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் இணைந்து பஞ்சாப் அணிக்கு ரன்கள் சேர்த்து வருகின்றனர்.
ஓ, இது தான் என்னுடைய கடைசி சீசன் என்று முடிவு பண்ணிட்டீங்களா? தோனி கேள்வி!
மும்பை அணியைப் பொறுத்த வரையில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினால், ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் 3 இடங்களை பியூஷ் சாவ்லா படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 2 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பியூஷ் சாவ்லா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
Let's Play! 😄 pic.twitter.com/j6BISk5HaZ
— IndianPremierLeague (@IPL)
Mumbai Indians have won the toss and elect to bowl first against Punjab Kings.
Live - https://t.co/IPLsfnImuP pic.twitter.com/QXPqPg1XhM